தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato-egg Cutlet : சூடான, சுவையான உருளைக்கிழங்கு முட்டை கட்லெட் – குழந்தைகளை மகிழ்விக்கும் ஸ்னாக்!

Potato-Egg Cutlet : சூடான, சுவையான உருளைக்கிழங்கு முட்டை கட்லெட் – குழந்தைகளை மகிழ்விக்கும் ஸ்னாக்!

Priyadarshini R HT Tamil
Aug 14, 2023 11:00 AM IST

Potato-Egg Cutlet : பள்ளி விட்டு மாலையில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சுடசுட சுவையான, ஆரோக்கியமான உருளைக்கிழங்கு, கட்லெட் செய்துகொடுத்தால் மகிழ்வார்கள்.

உருளைக்கிழங்கு முட்டை கட்லெட் செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு முட்டை கட்லெட் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து மசித்தது)

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

இஞ்சி - பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

சீரக தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முட்டை - 2 (வேக வைத்தது)

முட்டை - 1

எண்ணெய்

பிரட் தூள்

செய்முறை

வேகவைத்த உருளைக்கிழங்கை, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி, மசித்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

வேகவைத்த முட்டையை நான்கு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

சிறிய கிண்ணத்தில், முட்டை உடைத்து ஊற்றி, அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கையில் சிறிது எண்ணெய் தடவி, கிழங்கு கலவையில் முட்டை துண்டு வைத்து மூடவேண்டும்.

அதை அடித்து வைத்த முட்டையில் தோய்த்து, பிரட் தூளில் போட்டு பிரட்டி கட்லெட்டை நன்றாக செட் செய்து வைக்க வேண்டும்.

இதை 10 நிமிடம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, கட்லெட்களை வறுத்து எடுக்க வேண்டும்.

இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

பள்ளி விட்டு மாலையில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சுடசுட சுவையான, ஆரோக்கியமான உருளைக்கிழங்கு, கட்லெட் செய்துகொடுத்தால் மகிழ்வார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்