Pirandai Chutney Recipe : எலும்புகளை இரும்பாக்க உதவும் பிரண்டையில் இப்படி ஒரு சட்னி செஞ்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pirandai Chutney Recipe : எலும்புகளை இரும்பாக்க உதவும் பிரண்டையில் இப்படி ஒரு சட்னி செஞ்சு பாருங்க!

Pirandai Chutney Recipe : எலும்புகளை இரும்பாக்க உதவும் பிரண்டையில் இப்படி ஒரு சட்னி செஞ்சு பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 29, 2024 07:00 AM IST

Pirandai Chutney Recipe : பிரண்டையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால். மூலதினவு, மூல ரத்தம், வயிறு சார்ந்த பிரச்னை, கபம், ரத்த போக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. சிலந்திகடி, பித்தம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக களிப்பிரண்டை இருந்து வருகிறது.

Pirandai Chutney Recipe : எலும்புகளை இரும்பாக்க உதவும் பிரண்டையில் இப்படி ஒரு சட்னி செஞ்சு பாருங்க!
Pirandai Chutney Recipe : எலும்புகளை இரும்பாக்க உதவும் பிரண்டையில் இப்படி ஒரு சட்னி செஞ்சு பாருங்க!

பிரண்டை சட்னிக்கு தேவையான பொருட்கள்

பிரண்டை - 150 கிராம்

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

உளுந்து - 2 ஸ்பூன்

கடலை பருப்பு - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - 1/4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

காய்ந்த மிளகாய் - 5

பூண்டு - 5 பல்

உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள்

பெருங்காயம்

கொத்தமல்லி

கறிவேப்பிலை

புளி - சிறிய அளவு

தேங்காய் - சிறிய துண்டு

பிரண்டை சட்னி செய்முறை

பிரண்டையை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

இப்போது கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் பிரண்டையை சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பையும் கால் ஸபூன் மஞ்சள் தூளையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதை தனியான ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு 2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் சிறிதளவு பெருங்காயத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். 5 காய்ந்த மிளகாய் ஒரு பச்சை மிளகாய் மற்றும் 5 பல் பூண்டையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் கால் ஸ்பூன் இஞ்சியையும், வெட்டி வைத்த சின்ன வெங்காயம் சிறிதளவு புளி மற்றும் ஒரு கைபிடி கொத்த மல்லியையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் தேங்காயையும் சேர்த்து வதக்க வேண்டும். இப்படி வதக்கிய பொருட்களை நன்றாக ஆற வைக்க வேண்டும்.

பின்னர் இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். உப்பை சரி பார்த்து தேவை என்றால் சேர்த்து கொள்ளலாம்.

கடைசியாக

ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அரை ஸ்பூன் கடுகு உளுந்தபம்பருப்பு வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அவ்வளவு தான் ருசியான பிரண்டை சட்னி ரெடி. இந்த சட்னி சூடான இட்லி, தோசை சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். அடிக்கடி பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பலனைத் தரும்.

பிரண்டையின் வகைகள்

வழக்கமான பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பிரண்டையில் நான்கு வகைகள் இருக்கின்றன.

பிரண்டையில் உள்ள சத்துக்கள்.

பிரண்டையில் அமிரோன், சிட்டோசிரால், அமைரின், விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதில் மூன்று பட்டையுடன் கூடிய முப்பிரண்டை அரிய வகை பிரண்டையாக உள்ளது. இதனை காயகல்ப மூலிகை என்றும் அழைப்பதுண்டு. மருந்துடன், இதை சேர்த்து பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு சித்தர்கள் பயன்படுத்தி வந்ததாக குறிப்புகளும் உள்ளன.

பிரண்டை மருத்துவ குணங்கள்

சாதாரண பிரண்டையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால். மூலதினவு, மூல ரத்தம், வயிறு சார்ந்த பிரச்னை, கபம், ரத்த போக்கு ஆகியவை போகும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

சிலந்திகடி, பித்தம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக களிப்பிரண்டை இருந்து வருகிறது. அதேபோல் மந்தம், சீதக்கட்டு, இரைப்பு வீக்கம், வாதம் போன்றவற்றை போக்க தீம்பிரண்டையும், மார்பு நோய், கபத்தை நீக்க புளிப்பிரண்டை உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.