Herbal Recipes: எலும்புகளுக்கு வலுசேர்க்கும் பிரண்டையில் சட்னி செய்முறை
எலும்புகளுக்கு வலுசேர்க்கும் பிரண்டையில் சட்னி செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; பிரண்டை ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும். பிரண்டையில் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
பிரண்டையை வைத்து ஆரோக்கியமான சட்னி செய்யலாம். இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமாகவும் ருசியாகவும் இருக்கும்.
பிரண்டை சட்னி செய்யத் தேவையானபொருட்கள் :
பொடியாக நறுக்கிய -1 கப்
வெங்காயம் -2 கப்
மிளகாய் வத்தல்-4
தனியா -1 தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
தேங்காய் -3 or 5 தேக்கரண்டி
புளி -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - 1தேக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து -1 தேக்கரண்டி
கடலை பருப்பு -1தேக்கரண்டி
வத்தல் -2
கறிவேப்பிலை
ஆயில் தேவையானவை
செய்முறை :
* கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் ,வத்தல்,தனியா,சீரகம் சேர்த்து நன்றாக வாதக்கவும் .
*பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் .
*வதக்கிய பொருளை தனியாக எடுத்து வைக்கவும்.
*அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரண்டையை நன்றாக வதக்கவும் .
*சூடு அறிய பிறகு வதக்கிய அனைத்தையும் உப்பு,புளி சேர்த்து அரைக்கவும் .
*கடைசியில் தாளிக்க தேவையான பொருளை சேர்த்து தாளித்து சேர்க்கவும் .
*பிரண்டை துவையல் /சட்டினி தயார் .
டாபிக்ஸ்