தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pitha Kashayam : பித்தம் அதிகரித்துவிட்டதா? 7 நாள் வெறும் வயிற்றில் இந்த கஷாயத்தை மட்டும் பருகவேண்டும்!

Pitha Kashayam : பித்தம் அதிகரித்துவிட்டதா? 7 நாள் வெறும் வயிற்றில் இந்த கஷாயத்தை மட்டும் பருகவேண்டும்!

Priyadarshini R HT Tamil
May 13, 2024 05:59 AM IST

Pitha Kashyam : பித்த கஷாயம் எப்படி செய்யவேண்டும் என்று தெரியுமா?

Pitha Kashayam : பித்தம் அதிகரித்துவிட்டதா? 7 நாள் வெறும் வயிற்றில் இந்த கஷாயத்தை மட்டும் பருகவேண்டும்!
Pitha Kashayam : பித்தம் அதிகரித்துவிட்டதா? 7 நாள் வெறும் வயிற்றில் இந்த கஷாயத்தை மட்டும் பருகவேண்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

இஞ்சி அல்லது சுக்கு – 2 இன்ச்

மல்லி விதைகள் – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

செய்முறை

2 டம்ளர் தண்ணீரில் இந்தப்பொருட்களை சேர்த்து, அந்த தண்ணீர் ஒரு டம்ளர் அளவு சுண்டும் வரை கொதிக்கவைத்து, தேன் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு இல்லாமலும் பருகலாம். இவையிரண்டும் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள் வேண்டிய பொருட்கள்தான்.

இதை தினமும் காலையில் ஒரு வாரம் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

உங்களுக்கு பித்தத்தால் ஏற்படும் பிரச்னைகளைப்போக்க உதவும். அதுமட்டுமின்றி உங்களுக்கு செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளையும் குணப்படுத்த உதவுகிறது.

பித்தம் என்றால் என்ன?

கல்லீரலுக்கு கீழ்புறத்தில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் சுரக்கும் திரவத்திற்கு பெயர் பித்தம். இது கல்லீரலில் இருந்து சுரந்து வந்து பித்தப்பையில் சேகரமாகும். அது அளவாக சுரப்பது உணவை செரிக்க உதவும். இந்த திரவம்தான் கொழுப்பை, கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது.

அது உடல் முழுவதும் செரிமான உறுப்புகள் வழியாக எடுத்துச்செல்லப்படுகிறது. பித்தம் உடலில் உள்ள சில நச்சுக்களை வெயேற்றவும் உதவுகிறது. பித்த திரவங்கள், உப்புகள், பாஸ்போலிபிட்கள், கொழுப்பு, தண்ணீர், நிறமிகள் மற்றும் எலக்ட்ரோலைட்களால் ஆனது.

கல்லீரல் செல்களில் இருந்து பித்தம் சுரக்கிறது. இதை பித்தப்பை சேகரித்து வைத்துக்கொண்டு உணவு உண்டபின் அது செரிக்க தேவையான அளவை கொடுக்கும். ஆனால் இந்த பித்தம் அளவாகத்தான் சுரக்கவேண்டும். ஆனால் அது அளவுக்கு அதிகம் சுரக்கும்போது, உடலுக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

வாந்தி, மயக்கம், சோர்வு, மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள், தலை வலி, ஒற்றைத் தலைவலி, தலையில் பொடுகு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கு பித்தப் பிரச்னைகள் உள்ளது என்றால், கை – கால்கள் மற்றும் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு ஏற்படும்.

பசியின்மை இருக்கும். தண்ணீர் அதிகம் பருகாமல் விட்டாலும் பித்தக்கோளாறுகள் ஏற்படும். எனவே தண்ணீரும் அதிகம் பருகவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்