Pepper Rice Recipe: குளிர்காலத்தில் தொண்டைக் கமறலுக்கு ஏற்ற மிளகு சாதம்

I Jayachandran HT Tamil
Dec 01, 2022 10:13 PM IST

குளிர்காலத்தில் சளித் தொல்லைால் இருமல், தொண்டைக்கட்டு, தொண்டைக் கமலறல் ஏற்படும். ்அதற்கு இதமான மிளகு சாதம் செய்முறை பற்றி பார்க்கலாம்.

மிளகு சாதம்
மிளகு சாதம்

ட்ரெண்டிங் செய்திகள்

2 கப் வேக வைத்த சாதம்

2 டீஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் கொண்டைக்கடலை

கறிவேப்பிலை 1 தழை

பெருங்காயம் அரை டீஸ்பூன்

சின்ன வெங்காயம் 5 பொடியாக நறுக்கியது

முந்திரிப்பருப்பு 10

1 டேபிள் ஸ்பூன் கருமிளகுத் தூள்

1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானவுடன் கடுகு, கொண்டைக்கடலை, உளுந்தம்பருப்பை போட்டு வதக்கவும்.

லேசாக நிறம் மாறியதும் கறிவேப்பலையைப் போடவும். பின்னர் வெங்காயம், முந்திரிப் பருப்பு, போட்டு வறுக்கவும்.

கறிவேப்பிலை வெடித்ததும் பெருங்காயம் சேர்க்கவும்.

சில நிமிடங்கள் கழித்து சாதத்தை சேர்த்து கிளறி விடவும்.

பின் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசிறி விடவும்.

கடைசியில் சாதத்தை இறக்கி வைத்து சூடாகப் பரிமாறவும்.

WhatsApp channel