Pepper Chicken Fry : மணமணக்கும் கோழி மிளகு வறுவல்! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் அசத்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pepper Chicken Fry : மணமணக்கும் கோழி மிளகு வறுவல்! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் அசத்தும்!

Pepper Chicken Fry : மணமணக்கும் கோழி மிளகு வறுவல்! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Jun 01, 2024 12:38 PM IST

Pepper Chicken Fry : மணமணக்கும் கோழி மிளகு வறுவல். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்வது எப்படி?

Pepper Chicken Fry : மணமணக்கும் கோழி மிளகு வறுவல்! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் அசத்தும்!
Pepper Chicken Fry : மணமணக்கும் கோழி மிளகு வறுவல்! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் அசத்தும்!

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (கீறியது)

இஞ்சி – பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

முழு கரம் மசாலா (பட்டை – 1, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, ஸ்டார் சோம்பு – 1, ஏலக்காய் – 1)

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகப்பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

மிளகு – ஒன்றரை ஸ்பூன் (நுணுக்கியது)

எலுமிச்சை – அரைப்பழம்

சோம்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

சிக்கனை மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சோம்பு தாளித்து, அது பொரிந்ததும், முழு கரம் மசாலாவையும் சேர்க்கவேண்டும்.

வெங்காயம் நறுக்கியது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

இஞ்சி-பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவேண்டும்.

தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும், நன்றாக தக்காளி மசிந்து வரவேண்டும்.

மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்துவரும் பதத்தில், சிக்கனை சேர்த்து வதக்கவேண்டும்.

சிக்கனை நன்றாக வேகவைத்து, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் வேகவைத்தால் நன்றாக இருக்கும். கிரேவியாக வேண்டுமெனில், தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

சிக்கன் வெந்தவுடன், அதில் மிளகுத்தூளை தூவவேண்டும். நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவேண்டும்.

மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும்.

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.