Tomato Thokku : தின்னத்தின்ன தெவிட்டாத சுவையில், இப்படி ஒருமுறை தக்காளி தொக்கு செஞ்சு பாருங்க!
Tomato Thokku : தின்னத்தின்ன தெவிட்டாத சுவையில் இப்படி ஒருமுறை தக்காளி தொக்கு செஞ்சு பாருங்க, இதையே திரும்ப திரும்ப செய்வீங்க.
இதுபோல் ஒருமுறை செய்துவிட்டால் நீங்கள் மீண்டும், மீண்டும் இதே முறையில் செய்வீர்கள். இதை செய்வதும் எளிது. மேலும் வீட்டில் உள்ள மசாலா பொருட்களே போதும் இதைச் செய்வதற்கு என்று அவர் கூறுகிறார். இந்த தக்காளி தொக்கு ரெசிபியை கட்டாயம் முயற்சி செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி – அரை கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய்த்தூள் – அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி – அரை ஸ்பூன்
வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளியை கழுவிய பின் தண்ணீர் இல்லாமல் துடைத்த பின்னர், நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும். புளியை சூடான நீரில் ஊறவைத்து அரை கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும்.
கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, உளுந்து சேர்த்து வெடித்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவேண்டும்.
பின்னர் மூடிவைத்து தக்காளியில் இருக்கும் தண்ணீர் பிரிந்து மென்மையாகும் வரை வேகவிடவேண்டும்.
தக்காளி நன்றாக குழைந்த பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவேண்டும். பின்னர் கரைத்த புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
மிதமான சூட்டில் கலவை சிறிது நேரம் கொதித்தவுடன், பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து தொக்கு கெட்டியாகும்போது வறுத்து பொடித்த வெந்தயப்பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவேண்டும்.
குறிப்புகள்
நன்றாக பழுத்த தக்காளிதான் எப்போதும் தொக்கு செய்ய பயன்படுத்தவேண்டும்.
நாட்டு தக்காளி, பெங்களூர் தக்காளி இரண்டும் கலந்து எடுத்துக்கொண்டால் சுவை, மணம் என அனைத்தும் நன்றாக இருக்கும்.
இந்தத் தொக்கை இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.
காற்று புகாத பாட்டிலில் சேமித்து ஃபிரிட்ஜில் வைத்து இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
தக்காளி மலிவாக கிடைக்கும் காலங்களில், இதுபோன்ற தொக்கை செய்து வைத்துக்கொள்வது நல்லது.
இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
அடுத்த செய்தி
தமிழகத்தில் கேள்விக்குறியாகும் 60 சதவீத தாய்மார்களின் பேறுகால உபாதைகள் – அதிர்ச்சி ஆய்வு!
தமிழகத்தில் 40 சதவீதம் கருவுற்ற தாய்மார்கள் மட்டுமே தேவையான அளவு எடை அதிகரித்தும், ஹீமோகுளோபின் அளவு (ரத்தம்) தேவையான அளவில் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருவுற்ற தாய்மார்கள் தேவையான வளர்ச்சியை எட்டுகின்றனரா, இல்லையா? என அறிய, கருவுற்ற பின், குழந்தை பிறப்பிற்கு முன் 9-10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும்.
இந்த செய்தியை முழுமையாக படிக்க வேண்டுமா? இங்கே உள்ள லிங்கை கிளிக்செய்யுங்கள்.
டாபிக்ஸ்