தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chilly Chicken : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் சில்லி சிக்கன்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ் ரெசிபி இதோ!

Chilly Chicken : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் சில்லி சிக்கன்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ் ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
May 31, 2024 01:51 PM IST

Chilly Chicken : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் சில்லி சிக்கன், குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ் ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்.

Chilly Chicken : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் சில்லி சிக்கன்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ் ரெசிபி இதோ!
Chilly Chicken : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் சில்லி சிக்கன்! குழந்தைகள் விரும்பும் சூப்பர் ஸ்னாக்ஸ் ரெசிபி இதோ! (yummy tummy aarthi)

ட்ரெண்டிங் செய்திகள்

கடலை மாவு – 2 ஸ்பூன்

கார்ன் ஃப்ளார் – ஒரு ஸ்பூன்

அரிசி மாவு – 2 ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

சீரகத்தூள் – கால் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்

முட்டை – 1

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

போன்லெஸ் சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். அதில் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு, முட்டை, இஞ்சி-பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர், அதை ஒரு மணி நேரம் ஊறுவைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் சேர்த்து அதை சூடாக்கி அதில் தனித்தனியாக பொரித்து எடுத்தால், சில்லி சிக்கன் தயார்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்னாக்ஸாக சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். இதை பிரியாணி உள்ளிட்டவற்றுக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

இதை இப்படியேவும் சாப்பிடலாம் அல்லது இதை வெங்காயம், குடை மிளகாய் தாளித்து சாஸ்கள் தூவியும் சாப்பிடலாம். 

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்