Parenting Tips : உலகின் சிறந்த வெற்றியாளர் குழந்தைகளை உருவாக்கிய பெற்றோர் கடைபிடித்த விதிகள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உலகின் சிறந்த வெற்றியாளர் குழந்தைகளை உருவாக்கிய பெற்றோர் கடைபிடித்த விதிகள் இவைதான்!

Parenting Tips : உலகின் சிறந்த வெற்றியாளர் குழந்தைகளை உருவாக்கிய பெற்றோர் கடைபிடித்த விதிகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Jan 29, 2024 02:03 PM IST

Parenting Tips : உலகின் சிறந்த வெற்றியாளர் குழந்தைகளை உருவாக்கிய பெற்றோர் கடைபிடித்த விதிகள் இவைதான்!

Parenting Tips : உலகின் சிறந்த வெற்றியாளர் குழந்தைகளை உருவாக்கிய பெற்றோர் கடைபிடித்த விதிகள் இவைதான்!
Parenting Tips : உலகின் சிறந்த வெற்றியாளர் குழந்தைகளை உருவாக்கிய பெற்றோர் கடைபிடித்த விதிகள் இவைதான்!

அதில் முக்கியம் கற்றல் மீதான காதலை வளர்த்து எடுக்க வேண்டும். வாழ்வின் அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும் மதிப்பீடுகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். கல்வியில் பெறுவது மட்டுமல்ல அனைத்திலும் அவர்கள் வெற்றிபெறவேண்டும்.

உங்கள் குழந்தை கல்வியிலும் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் நல்லவராகவும் வெற்றி பெறுவதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

வீட்டில் நல்ல சூழலை உருவாக்க வேண்டும்

வெற்றிக்கான விதைகளுள் நல்ல சூழலை வீட்டில் அவர்களுக்கு உருவாக்கி தருவது நல்லது. அவர்களுக்கான அன்றாட பழக்கவழக்கத்தை உருவாக்கிக்கொடுங்கள்.

வீட்டுபாடங்கள் செய்வதற்கான நேரம், வீட்டு வேலைகள் செய்வதற்கான நேரம், உறங்கும் நேரம், விளையாட நேரம் என அவர்களுக்கு பட்டியலிட்டு அதை பழக்கப்படுத்தினால், அவர்களுக்கு இது நிறைய விஷயங்களை ஆய்ந்தறிவதற்கு உதவும். கற்றலை வீட்டுடன் தொடர்புபடுத்தி கூறுங்கள். அவர்கள் பள்ளியில் கற்கும் திறன்கள் அவர்களுக்கு வீட்டில், உண்மை வாழ்வில் எவ்வாறு உதவுகிறது என்பதை உணர்த்தி காட்டுங்கள்.

வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு ஒரு ரோல்மாடலாக இருங்கள். ஆர்வத்தை வளர்க்கவும், உங்கள் குழந்தை தங்கள் கல்விப்பயணத்தில் சாதனை புரியவும் வழிகாட்டுங்கள்.

உங்கள் குழந்தையின் பள்ளியுடன் ஒரு கூட்டுறவை வளர்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் குழந்தையின் பள்ளியுடன் ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் ஆசிரியர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுங்கள். பள்ளி செயல்பாடுகளில் பங்கேற்பதும் வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளில் ஈடுபாட்டுடன் இருங்கள். அவர்கள் பள்ளியுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தைகளின் கல்வி வாழ்க்கையில் மட்டும் ஒளியேற்றவில்லை. இதன் மூலம் அவர்களின் வெற்றிக்கும் பாதை வகுக்கிறீர்கள்.

குழந்தைகளுடன் திறந்த உரையாடல் செய்யுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு பொறுப்பு மற்றும் சுதந்திரம் இரண்டையும் கற்றுக்கொடுங்கள். தெளிவான, சரியான விதிகளை அவர்களுக்கு வகுத்து கொடுங்கள். அதை அவர்கள் பின்பற்றுவதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களின் வளர்ச்சியை கண்காணியுங்கள்.

ஆனால் அவர்களுக்கு அது சுமையாகக்கூடாது. அவர்களின் வெற்றிகளை கொண்டாடுங்கள். அவர்கள் தனியாக பொறுப்போற்று செய்த வேலைகள் மற்றும் செயல்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அது அவர்களின் பொறுப்பை மேலும் அதிகரிக்கும். சவால்கள் மூலமே அவர்கள் கற்று வளர்கிறார்கள்.

அவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துங்கள்

உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிகளை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அதில் ஏதேனும் சவால்கள் இருந்தால், அவர்களுக்கு உதவுங்கள். அவர்களுக்கு தேவையான கற்றல் திறன்களை ஏற்படுத்தி கொடுங்கள். அவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும்போது அவர்களுக்கு உதவுங்கள்.

அவர்கள் வீட்டுப்பாடங்களை செய்ய உதவுங்கள். அவர்கள் தங்களின் காலையை ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன் துவங்குவதை உறுதிப்படுத்துங்கள். ஆரோக்கியமான உறக்கப்பழக்கவழக்கத்தை கற்றுக்கொடுங்கள். இவைதான் அவர்கள் ஒரு நாளின் எந்த சவாலையும் துணிவுடன் எதிர்கொள்ள உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.