தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips Does Your Child Run Away In Fear Of Anything These Are The Mantras That Cheer Them Up

Parenting Tips : உங்கள் குழந்தை எதற்கெடுத்தாலும் பயந்து ஓடுகிறார்களா? அவர்களை உற்சாகப்படுத்தும் மந்திரங்கள் இவை!

Priyadarshini R HT Tamil
Mar 19, 2024 05:30 PM IST

Parenting Tips : பயத்துடன் வாழும் குழந்தைக்கு தெரியவேண்டிய விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : உங்கள் குழந்தை எதற்கெடுத்தாலும் பயந்து ஓடுகிறார்களா? அவர்களை உற்சாகப்படுத்தும் மந்திரங்கள் இவை!
Parenting Tips : உங்கள் குழந்தை எதற்கெடுத்தாலும் பயந்து ஓடுகிறார்களா? அவர்களை உற்சாகப்படுத்தும் மந்திரங்கள் இவை!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த மந்திரங்கள் அதற்கு உதவும்

பதற்றத்தில் இருக்கும் உங்கள் குழந்தைகளிடம் இந்த மந்திரங்களை கூறிப்பாருங்கள். பதற்றத்தில் உள்ள குழந்தைகள் கேட்க விரும்புவது இதைத்தான், அந்த வார்த்தைகள் என்ன? இந்த வார்த்தைகள் ஏன் அவர்களை அத்தனை ஆறுதல் படுத்திகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

எது நடந்தாலும் நான் உன்னோடு இருக்கிறேன்

குழந்தைகள் தங்களுக்கு பயம் மற்றும் பதற்றம் ஏற்படும்போது அதிக கவலைப்படுகிறார்கள். பயப்படுகிறார்கள். அவர்களுக்கு தங்களின் பிரச்னைகளை தாங்கள் மட்டுமே தனியாக அனுபவிப்பதாக எண்ணி அஞ்சுவார்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என உறுதியளிக்க வேண்டும். இது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

பயப்படுவது சரிதான்

உங்கள் குழந்தைகளின் அச்சம் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அச்சம் என்பது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான ஒன்றுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் குறித்து நீங்கள் பெருமையடைகிறீர்கள், அவர்களின் அச்சத்தை முன்னிறுத்தி, அவர்களை வலுப்படுத்த வேண்டும். இது அவர்களின் உணர்வுகளை தைரியமாக கடந்து செல்ல உதவும்.

உங்களை எந்த நிபந்தனையுமின்றி அன்பு செய்கிறேன்

அச்சமுள்ள குழந்தைகள், அவர்கள் மீது அன்பு காட்டுவார்களாக என்ற அச்சத்திலும் இருப்பார்கள். அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எண்ணுவார்கள். அவர்களுக்கு அவர்களின் மீதே சந்தேகம் எழும், பாதுகாப்பின்றி இருப்பார்கள். அவர்களுக்கு உங்களின் அன்பு எந்த நிபந்தனையும் இல்லாதது என்று உணர்த்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் உங்களை சார்ந்திருப்பதும், அவர்களின் மதிப்பும் அளப்பரியது என்று உணர்த்துங்கள்.

நாம் இந்த பிரச்னையை சேர்ந்து எதிர்கொள்வோம்

குழந்தைகள் பதற்றத்தை எதிர்கொள்வது, அவர்களுக்கு பெரும் சவாலானதாக இருக்கும். அதற்கு அவர்களுக்கு உங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதை உணர்த்த வேண்டும். அது அவர்களிடம் பல மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தைக்கு உதவுவதில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 

அவர்களுக்கு உதவுவதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள் என்பதையும் உணர்த்த வேண்டும். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் என அனைவரும் சேர்ந்து உங்கள் பிரச்னைகளையும், தடைகளையும் குழுவாக கடப்போம் என்று உறுதிகொள்ளுங்கள்.

அவர்களுக்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள்

அச்சமுள்ள குழந்தைகள் அவர்களின் பதற்றங்களில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்ற அழுத்ததை உணர்வார்கள். இதுதான் அவர்களின் மனஅழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கும். எனவே அவர்களின் பிரச்னைகளை அவர்களாகவே கடக்க அவர்களுக்கு உதவவேண்டும். 

எந்த அழுத்தமும் இன்றி அவர்கள் பிரச்னைகளை சமாளித்து வர அவர்களுக்கு உதவவேண்டும். அவர்களுக்கு தேவையான நேரத்தில் அவர்கள் மீண்டு வரட்டும். அதற்கு நீங்கள் உதவவேண்டும். போதிய கால அளவை உறுதிப்படுத்துவது உங்களின் பொறுப்பு.

உங்கள் உணர்வுகள் மதிப்புமிக்கவை

அச்சமுள்ள குழந்தைகள், அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள அஞ்சுவார்கள், அவர்களை யாராவது விமர்சிப்பார்கள் என நினைப்பார்கள். அவர்களின் உணர்வுகளை யாராவது விமர்சிக்கும்போது அதை கையாள தெரியாமல் அவர்களின் பதற்றம் மேலும் அதிகரிக்கும். 

அவர்களின் உணவுகளை மதித்து, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு தேவைப்படும்போது உதவி, அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உறுதிசெய்து, அவர்களுடன் எப்போது திறந்த உரையாடல் நடத்த வேண்டியது உங்கள் கடமை.

நீங்கள் நினைப்பதைவிட நீங்கள் பலசாலிகள்

அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சந்தேகம் ஏற்படும்போதுதான், அவர்களின் உள்புற பலத்தை நீங்கள் அவர்களுக்கு உணர்த்தவேண்டும். அவர்களால் எவ்வித சூழலிலும் இருந்து மீள முடியும் என்பது அவர்களை வலுப்படுத்தும் காரணியாக அமையும். 

அவர்களின் திறன்களை எப்போதும் அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் கடந்த கால வெற்றிகளை அவர்களுக்கு கூறும்போது தன்னம்பிக்கை பெறுகிறார்கள். எனவே அச்சத்தில் உழலும் உங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து நீங்கள் அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை அவர்கள் வெளியேற உதவவேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்