தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Amla Rice Fragrant Gooseberry Rice Kids Will Love To Eat It In The Lunch Box

Amla Rice : மணமணக்கும் நெல்லிக்காய் சாதம்; லன்ச் பாக்ஸில் வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Priyadarshini R HT Tamil
Feb 26, 2024 08:00 AM IST

Amla Rice : மணமணக்கும் நெல்லிக்காய் சாதம்; லன்ச் பாக்ஸில் வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Amla Rice : மணமணக்கும் நெல்லிக்காய் சாதம்; லன்ச் பாக்ஸில் வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!
Amla Rice : மணமணக்கும் நெல்லிக்காய் சாதம்; லன்ச் பாக்ஸில் வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்! (subbu's kitchen)

ட்ரெண்டிங் செய்திகள்

நெல்லிக்காய் – 3

வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

நெல்லிக்காயை நன்றாக கழுவி விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் சிறிய மிக்ஸி ஜாரில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

வேகவைத்த சாதத்தை ஒரு அகலமான தட்டில் ஆறவைத்து சாதத்தின் மேலே சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து ஆறவிடவேண்டும்.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வேர்க்கடலை சேர்த்து பொரிந்ததும் சாதத்தில் சேர்த்து கலந்து விடவேண்டும்.

பின் அதே கடாயில் மேலும் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின் அதில் நறுக்கிய பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.

பச்சை மிளகாய் நிறம் மாறியதும் அரைத்த நெல்லிக்காய் விழுதை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வதக்கவேண்டும்.

பின் அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவேண்டும். அவை வதங்கியதும் வேகவைத்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக கலந்து விடவேண்டும்.

சாதம் நன்றாக நெல்லிக்காய் கலவையோடு சேர்ந்த பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி பத்து நிமிடங்கள் மூடி வைக்கவேண்டும். விருப்பப்பட்டால் பச்சை மிளகாய் வதக்கும்போது சிறிது துருவிய இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகள் நெல்லிக்காயை பச்சையாக சாப்பிட மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் லன்ச் பாக்ஸிற்கு நெல்லிக்காய் சாதத்தை செய்து கொடுத்து பாருங்கள். கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். 

மேலும் நெல்லிக்காய் அவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுக்க உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

நன்றி - விருந்தேம்பல். 

நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்

வைட்டமின் சி சத்து நிறைந்தது

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

உடல் வளர்சிதைக்கு உதவுகிறது

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.

நெல்லிச்சாறு மூலம் உங்கள் உடலின் கழிவுகளை நீக்கலாம்

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது.

மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது

இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கண்பார்வை மேம்பட உதவுகிறது

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்