Parenting Tips : உங்கள் குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமா? அதற்கு நீங்கள் இப்படி உதவலாம்!
Parenting Tips : அவர்களுக்கு சுய விழிப்புணர்வு மற்றும் சுய வழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் நல்ல முடிவுகள் எடுப்பதற்கு உதவுங்கள். அவர்கள் வெற்றியாளராவதற்கு பலமான மேடையை வகுத்துக்கொடுங்கள்.
உங்கள் குழந்தையை வெற்றியாளராக்க உதவும் ரகசியங்கள்
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சி, வெற்றியாளராகவும், நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். ஆனால் அவர்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வது எது? ஆனால் அதற்கு இது தான் ஃபார்முலா என்று கூறமுடியாது.
ஆனால் அதற்கு உதவக்கூடிய சில முக்கிய விஷயங்கள் நமக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கு உதவும். அவர்களின் முழுத்திறன்களையும் அறிந்து, அவர்களிடம் அதை வளர்த்தெடுத்தால், அவர்கள் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாவார்கள். உங்கள் குழந்தைகளை வெற்றியாளராக்க வேண்டுமா? இதோ அதற்கு உதவும் வழிகள்!
சுயகட்டுப்பாட்டில் தேர்ச்சி பெறுவது
சுயகட்டுப்பாடு என்பது அவர்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவர்களின் உணர்வுகள் மற்றும் தூண்டுதல்களை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு முக்கிய திறன்களை வளர்க்க உதவலாம்.
இது அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலையில் சிறந்து விளங்க உதவும். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்து, 10 வரை எண்ண வேண்டும். அவர்கள் எந்த விஷயத்திலும், எதிர் வினையாற்றுவதற்கு முன்னர், சிறிய இடைவெளி எடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.
அவர்களுக்கு சுய விழிப்புணர்வு மற்றும் சுய வழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் நல்ல முடிவுகள் எடுப்பதற்கு உதவுங்கள். அவர்கள் வெற்றியாளராவதற்கு பலமான மேடையை வகுத்துக்கொடுங்கள்.
இம்பர்ஃபெக்டாக இருக்க முயற்சி செய்யுங்கள்
இன்றைய போட்டி நிறைந்த உலகில், குழந்தைகளை நாம் வெற்றிபெற வேண்டும் என்று உற்சாகப்படுத்துவது அவர்களின் சுமையை அதிகரிக்கச் செய்வதாகும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்க வேணடும்.
அவர்கள் தவறுகள் செய்து அதில் இருந்து கற்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். உண்மையில்லாத எதிர்பார்ப்புக்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை என்று அவர்களை வற்புறுத்தாதீர்கள். மாறாக அவர்களின் முயற்சிகளை கொண்டாடுங்கள்.
அவர்களின் மீண்டெழும் திறனை பாராட்டுங்கள். அவர்களை வளர்ச்சியை ஊக்குவியுங்கள். தவறுகள் செய்வது மனித இயல்பு என்பதை கற்றுக்கொடுங்கள். எனவே வளர்ச்சி மனநிலையையும், தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுங்கள். குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ள பழகுங்கள். அவர்களின் இலக்குகளை அடைய உதவுங்கள். அவர்களுக்கு ஏற்படும் தோல்வி பயத்தை போக்குங்கள்.
நிதி மேலாண்மை அவசியம்
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியமான பரிசு பொருளாதார அறிவு. அவர்களுக்க பணத்தின் அடிப்படையை கற்றுக்கொடுங்கள். குழந்தை வயதிலேயே அவர்களுக்கு பணத்தின் அருமையை உணர்த்தினால்தான் அவர்களின் வாழ்க்கைக்கு அது உதவும்.
அவர்களுக்கு பட்ஜெட், சேமிப்பு ஆகியவை குறித்து கற்றுக்கொடுங்கள். அவர்களை பணம் சேமிக்க உற்சாகப்படுத்துங்கள். அவர்களுக்கு பணத்தை செலவு செய்யும் தேர்வுகளை கொடுங்கள். அவர்களுக்கு பொருளாதார பொறுப்புகளை கற்றுக்கொடுங்கள்.
இளம் வயதிலேயே இவற்றை கற்பது நல்லது. உங்கள் குழந்தைகள் சிறிய பொருளாதார முடிவுகள் எடுப்பதற்கு உதவுங்கள். அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க அது உதவும். அவர்களின் எதிர்காலமும் பாதுகாப்பானதாக இருக்கும்.
தோல்வியில் இருந்து கற்றல்
உங்கள் குழந்தைகளுக்கு தோல்வியில் இருந்து கற்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். தோல்வி என்பதுதான் வெற்றியின் படிகள், வெற்றிக்கு எதிரானதல்ல தோல்வி என்பதை உணர்த்துங்கள். பெற்றோராக, நாம் அவர்களை தோல்வியில் இருந்து காப்பாற்ற நினைப்போம்.
ஆனால் அவர்களுக்கு அது கற்கும் வாய்ப்பை இழக்கச்செய்யும். இதனால் அவர்கள் மதிப்புமிக்க பாடங்களை இழக்கிறார்கள். அவர்களுக்கு வளர்ச்சி மனநிலையை வளர்த்தெடுப்பதற்கு பதில் தோல்வியில் இருந்து கற்பது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள். கற்றலை வளர்ச்சிகான வாய்ப்பாக பயன்படுத்த கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகள் கொஞ்சம் சவால்களை சமாளிக்கட்டும். அவர்களுக்கு பிடித்ததை செய்யட்டும். அதில் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் பிரச்னைகள் இல்லை. துன்பம் நேரும்போது அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அவர்கள் மதிப்புமிக்க பாடங்களை கற்க உதவுங்கள்.
தோல்வியில் இருந்து அவர்கள் மீண்டெழுவதற்கு தயார்படுத்துங்கள். அவர்கள் தடைகளை எதிர்கொள்ள வேண்டும். அவர்களின் கனவுகளை அவர்கள் சாதிக்கவேண்டும் என்றால் அவர்கள் தோல்வி பழகவேண்டும்.
ஆர்வத்தையும், கிரியேட்டிவிட்டியையும் வளர்த்தெடுங்கள்
ஆர்வம் என்பதுதான் புதுமைகள் படைப்பதற்கு காரணமாகிறது. கிரியேட்விட்டிதான் எல்லையில்லாத சாத்தியக்கூறுகளை உருவாக்குவதற்கு காரணமாகிறது.
எனவே குழந்தைகள் அவர்களின் ஆர்வங்களை கற்றுக்கொள்ளவும், கேள்விகள் கேட்கவும், கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்க்கவும் அவர்கள் சார்ந்திருக்கும் உலகை அவர்கள் புரிந்துகொள்ளவும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுங்கள். அவர்கள் கலை, இசை, எழுப்பு, பேச்சு உள்ளிட்ட அவர்களின தனித்திறன் சார்ந்த விஷயங்கள் அவர்கள் கற்க மற்றும் வெளிப்படுத்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுங்கள்.
அவர்கள் மகிழ்ந்திருக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுங்கள். வீட்டு வேலைகளை செய்வதிலும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். அதை வேலையாக பார்க்காமல் அவர்கள், அதையும் கற்றலாக பார்க்க பழக்குங்கள்.
அதிலும் ஆர்வத்தையும் கிரியேட்டிவிட்டியையும் உட்புகுத்துவதன் மூலம், உங்கள் குழந்தைகளின் சிந்தனை திறன்களை வளர்த்தெடுங்கள். அவர்களின் சிந்தனைகள் விரிவானதாக இருக்க வேண்டும். அவர்கள் கிரியேட்டிவாக பிரச்னைகளை தீர்க்க வேண்டும். வெற்றிக்கான பாதைகளை அவர்களே எடுக்க அமைக்க உதவ வேண்டும்.
டாபிக்ஸ்