Thapas Yoga: ’வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மன அழுத்ததை குறைப்பது எப்படி?’
”Stress Relief: தபஸ் யோகா மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். வீட்டில் ஸ்படிகமாலை, துளசிமாலை அல்லது ருத்ராட்ச மாலை இருந்தால் போதுமானது”
நவீனகால உலகில் அதிகம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்றாக மன அழுத்தம் மாறிவிட்டது. மன அழுத்தம் ஏற்படும் போது நமது உடலில் இருந்து கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் வெளியாகின்றன. இந்த வகை ஹார்மோன்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தம் ஏற்பட காரணமாக அமைகிறது. இன்றைக்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த மன அழுத்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்படுவதற்கு 5 விதமான சூழல்கள் பெருமளவில் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் அழுத்தங்கள்
நோய், காயம் அல்லது தூக்கமின்மை, உடல் வெப்பநிலை, அதிக சத்தம் போன்ற காரணிகள் மன அழுத்தம் ஏற்பட கூடிய நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குடும்ப சிக்கல்கள்
மன அழுத்தம் ஏற்பட குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்ளும் முக்கிய பங்குகள் வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உறவுச் சிக்கல்கள், வேலை அழுத்தம், பணம் சார்ந்த பிரச்னைகள் உள்ளிட்ட காரணிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
எதிர்மறை எண்ணங்கள்
எதையோ ஒன்றை நினைத்து அதிகப்படியான கவலைகொள்வது, எல்லா விஷயங்களிலும் முழு திருப்தியை எதிர்ப்பார்ப்பது, எதிர்மறை சிந்தனை ஆகியவைகள் அதிக மன அழுத்தம் ஏற்படுத்தம் காரணிகளாக உள்ளது.
மோசமான உடல் பராமரிப்பு
மோசமான உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சியின்மை, போதைப்பொருள் பயன்பாடு போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் கடுமையான மன அழுத்தத்தையும் அதனுடன் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தி செல்கிறது.
சமூக அழுத்தங்கள்
நம்மீது சமூகம் வைத்துள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக அழுத்தங்கள் ஆகியவை மன அழுத்தத்தின் குறிப்பிடத்தக்க ஆதாரங்களாக உள்ளது.
மாற்றம் தரும் தபஸ் யோகா
இது போன்ற மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிமையான முறையில் செய்யப்படும் தபஸ் யோகா தீர்வாக இருக்கும் என்கிறார் பிரபல ஜோதிடர் மகேஷ் ஐயர். இது தொடர்பாக கூறும் அவர்,
தபஸ் யோகா மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். வீட்டில் ஸ்படிகமாலை, துளசிமாலை அல்லது ருத்ராட்ச மாலை இருந்தால் அதனை கையில் வைத்துக் கொண்டு ஆள்காட்டி விரலை பயன்படுத்தாமல் கையில் வைத்துக் கொண்டு காலையில் ஓம் என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும் அப்போது அதிக காற்றை உள்ளிழுத்தவாறு சுவாசிக்க வேண்டும். இதன் மூலம் நமது சிந்தனை ஒருமுகப்படுத்தப்பட்டு மன கவலைகள் நீங்கும், மனம் தெளிவு பெறும் என்கிறார்.
மேலும் சிவனை வழிபடுகிறவர்கள் ஓம் நமசிவாய என்றோ அல்லது பெருமாளை வழிபடுபவர்கள் ஓம் நமோ நாராய நாய என்றோ அல்லது உங்களின் இஷ்ட தெய்வகங்களை பற்றியோ ஜெபமாலை முடியும் வரை ஜெபித்தால் பெரிய மாறுதல் ஏற்பட்டு மனதில் உள்ள கவலைகள் உடனடியாக தீரும் என மகேஷ் ஐயர் கூறுகிறார்.
டாபிக்ஸ்