தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : அடம்பிடிக்கும் குழந்தையை அடக்கி வழிக்கு கொண்டுவருவது எப்படி?

Parenting Tips : அடம்பிடிக்கும் குழந்தையை அடக்கி வழிக்கு கொண்டுவருவது எப்படி?

Priyadarshini R HT Tamil
Dec 30, 2023 01:00 PM IST

Parenting Tips : அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கி வழிக்கு கொண்டுவருவது எப்படி என்பது குறித்து பெற்றோர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Parenting Tips : அடம்பிடிக்கும் குழந்தையை அடக்கி வழிக்கு கொண்டுவருவது எப்படி?
Parenting Tips : அடம்பிடிக்கும் குழந்தையை அடக்கி வழிக்கு கொண்டுவருவது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளக்கூடாது

உங்களை விரக்தி வாட்டும் வேளையில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் இது உங்களின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. அடம்பிடித்தல் என்பது குழந்தைகளின் பொதுவான ஒரு குணம். குறிப்பாக குழந்தைகள் ஒன்றரை வயது முதல் 3 வயது வரை கடும் அடம்பிடிப்பவர்களாக இருப்பார்கள். எனவே சிறிது சுவாசம் வேண்டும். புன்னகை வேணடும். அவர்களின் புதிய சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்கட்டும்.

அவர்களுக்கு தேர்வுகளையும் விருப்பங்களையும் கொடுங்கள்

அவர்களிடம் கட்டளையிடுவதை விட்டுவிட்டு, அவர்களுக்கு தேர்வுகளையும், விருப்பங்களையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்வில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்களுக்கு சிவப்பு வண்ணம் வேண்டுமா? நீல வண்ணம் வேண்டுமா என்று கேட்காதீர்கள். நீங்கள் கேரட் சாப்பிட விரும்புகிறீர்களா அல்லது பட்டாணி சாப்பிட ஆசைப்படுகிறீர்களா என்று கேளுங்கள். இது ஆதிக்க பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இதனால், குழந்தைகளிடம் நட்பு அணுகுமுறை தோன்றும்.

எல்லைகளையும், எதிர்பார்ப்புகளையும் அமைத்துக்கொடுங்கள்

நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கும் குழந்தைகளே முன்னேறுகிறார்கள். எனவே அவர்களுக்கு எல்லைகளை வகுக்க வேண்டும். அதில் பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவிபுரிந்து, அவர்களுக்கு எல்லைகள் எதற்கு? விதிகள் எதற்கு என்று புரியவைக்க வேண்டும். எதிர்பார்ப்புகள் தெளிவாக இருக்கும்போது, அது குழப்பங்களை குறைக்கிறது. அவர்களுக்கு பின்பற்ற விதிகளையும் கொடுக்கிறது.

கவனியுங்கள், உரையாடுங்கள்

எந்த உறவும் வெற்றிகரமாக அமைவதற்கு அவர்களுடன் சிறந்த உரையாடல் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அது உங்கள் குழந்தைக்கும் பொருந்தும். எனவே உங்கள் குழந்தைகளின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். திறந்த உரையாடல் மூலம் அவர்களின் கோணத்தை புரிந்துகொள்ளுங்கள்.

நேர்மறையான வலுவூட்டல்

உங்கள் குழந்தைகள் நேர்மறையான நடவடிக்கைகளுடன் நடந்துகொண்டால், அதை ஒப்புக்கொள்ளுங்கள். நேர்மறையாக அவர்களுக்கு வலுவூட்ட வேண்டும். கடுமையான ஒழுக்கத்தைவிட அவர்களை நேர்மறையாக வழிநடத்துவது முக்கியமானது. அவர்களின் முயற்சிகளை போற்றுங்கள். அப்போது அவர்களின் முகங்களில் ஏற்படும் ஒளியை பாருங்கள். இது நன்னடத்தைக்கு சிறந்த ஊக்குவிப்பாகும்.

அதிகப்படியான விதிகளை தவிருங்கள்

அடம்பிக்கும் குழந்தைக்கு அதிகப்படியான விதிமுறைகள் கொஞ்சம் கொடுமைதான். எனவே உங்கள் எதிர்பார்ப்புகளை வழிப்படுத்தி, உங்களின் தேவைகளில் கவனம் செலுத்துங்கள். இது உங்கள் குழந்தைகளின் எதிர்ப்புகளை குறைக்காது. அவர்களின் கட்டுப்பாடுகளை குறைவாக உணர்த்துகிறது. ஒற்றுமை மனநிலையை உருவாக்குகிறது.

ஒரு ஒழுங்குமுறையை பராமரியுங்கள்

குழந்தைகளுக்கு ஒரு ஒழுங்குமுறை ஏற்படுத்தப்படும்போதுதான் அவர்கள் வழிக்கு வருகிறார்கள். எனவே அவர்களுக்கென்று சில வழிமுறைகளை வகுத்துக்கொடுங்கள். படுக்கை நேரம், உணவு நேரம் அல்லது வீட்டுப்பாடம் செய்யும் நேரம் என அவர்களுக்கு நேரங்களை ஒதுக்கி அவர்களுக்கு வேலைகளை முடிக்க ஏதுவாகவும், குழந்தைகளுக்கு சில விதிகளை கடைபிடிப்பதையும் அதை புரிந்துகொள்வதையும் செய்ய வேண்டியது அவசியம்.

தேவையென்றால் நிபுணர்கள் அறிவுரையை பெறுங்கள் 

வழக்கத்துக்கு அதிகமாக அடம்பிடித்தால், கட்டாயம் உங்களுக்கு நிபுணர்களின் வழிகாட்டல்தான் தேவைப்படுகிறது. குழந்தை மனநல நிபுணர்கள் உங்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்க முடியும். அவர்கள் உங்கள் குழந்தைகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுப்பார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்