பாலக்கீரை உள்ளிக்காரம்! ஆந்திராவின் ஸ்பெஷல் டிஷ்! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!
பாலக்கீரை உள்ளிக்காரம், ஆந்திராவின் ஸ்பெஷல் டிஷ். சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது. சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ரெசிபியை நீங்கள் செய்து ருசித்து பாருங்கள்.

பெண்கள் தினமும் உணவில் கட்டாயம் ஒரு கீரையை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது கட்டாயம் ஆகும். அது அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. கீரைகளில் பெண்களுக்கு தேவையான எது உள்ளது என்று தெரிந்தால் நீங்கள் உணவில் தினமும் ஒரு கீரையை கட்டாயம் சேர்த்துக்கொள்வீர்கள். பெண்களின் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும். அவையனைத்துக்கும் உங்களுக்கு நாள் முழுவதும் ஊட்டச்சத்துக்கள் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இது உங்கள் உடல் இயங்க உதவும் ஒன்றாகும். கீரையில் பாலக்கீரை மிகவும் சிறப்பான ஒன்றாகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் பெண்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஆற்றல் அதிகம் உள்ளது.
பாலக்கீரையில் பெண்களுக்கு தேவையான அடிப்படையான சத்துக்களுள் ஒன்றான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பாலக்கீரையில் 2.7 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. ஃபோலேட் (வைட்டமின் பி9) உள்ளது. கர்ப்பிணிகளுக்கு கரு வளர்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து ஆகும். 100 கிராம் கீரையில் 165 மில்லிகிராம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது.
100 கிராம் கீரையில் 99 மில்லிகிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இது பெண்களின் எலும்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. 100 கிராம் கீரையில் 79 மில்லிகிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் தசைகள் மற்றும் நரம்புகளின் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. ரத்தத்தை உறையச் செய்யவும், எலும்பு ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் கே சத்து மிகவும் முக்கியமானது. 100 கிராம் கீரையில் 482 மில்லி கிராம் வைட்டமின் கே சத்துக்கள் உள்ளது. வைட்டமின் ஏ உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறன் அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு நல்லது. 100 கிராம் கீரையில் ஒரு நாளைக்கு தேவையான அளவு வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது.