தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Palak Paneer Paratha : நாவில் எச்சில் வரவைக்கும் பாலக் பன்னீர் பராத்தா, ரெசிபி இதோ!

Palak Paneer Paratha : நாவில் எச்சில் வரவைக்கும் பாலக் பன்னீர் பராத்தா, ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Jun 28, 2023 10:42 AM IST

Palak Paneer Paratha : உங்கள் குழந்தைகள் கீரை சாப்பிட மாட்டார்களா? இதுபோல் செய்துகொடுங்கள். பாலக் பன்னீர் பராத்தா இந்த ஒரு மெயின் கோர்ஸ் உணவு. இதில் உள்ள கீரையால் இந்த உணவு எளிதில் செரிமானம் ஆகும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கோதுமை மாவு - 2 கப்

கார்ன் மாவு - 2 ஸ்பூன்

துருவிய பன்னீர் - 250 கிராம்

நன்றாக அலசி நறுக்கிய பாலக் கீரை - 2 கப்

துருவிய சீஸ் - 2 ஸ்பூன் (தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்)

சீரகம் - அரை ஸ்பூன்

சாட் மசாலா - அரை ஸ்பூன்

கரம் மசாலா - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

உப்பு தேவையான அளவு

நெய் அல்லது எண்ணெய்

எள்ளு - 1 ஸ்பூன்

கோதுமை, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். மாவை மிருதுவாக பிசைந்துகொள்ள வேண்டும். அதை நன்றாக மூடிவைத்து அரை மணி நேரம் நன்றாக மூடி வைத்து ஊறவிட வேண்டும்.

ஒரு கடாயில், எண்ணெயை சூடுபடுத்தி, சீரகத்தை போட வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கயி பின் அதில் நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து சமைக்க வேண்டும். நன்றாக வதங்கும் வரை வதக்கவும், அதை நன்றாக ஆறவிட வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் துருவிய பன்னீர் மற்றும் மசாலாக்களை சேர்க்க வேண்டும். இதில் ஆறிய கீரை கலவையை சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சீஸ், அந்தக்கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்தக்கலவையில் தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.

நன்றாக ஊறிய மாவை மீண்டும் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக்கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ள வேண்டும். இருபுறமும் பாதியளவு அந்த சப்பாத்தி வெந்திருக்க வேண்டும்.

அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து உள்ளே வைப்பதற்கு ஏற்கனவே செய்து வைத்துள்ள பாலக் பன்னீர் கலவை அதன் மத்தியில் வைத்து, மூடி விடவேண்டும்.

கார்ன் மாவில் பேஸ்ட் செய்து, இந்த பராத்வை மூடி ஓட்ட வேண்டும்.

இப்போது தோசை தவாவில் போட்டு இருபுறமும் நன்றாக பொன்னிறம் வரும் வரை சமைத்து எடுக்க வேண்டும். எஞ்சிய அனைதுது மாவையும் இதுபோல் செய்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே இதில் மசாலக்கள் உள்ளதால், இதை நாம் அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி, சாஸ் வைத்தும் சாப்பிடலாம். அவற்றை முக்கோண வடிவில் வெட்டி, ஸ்னாக்ஸ், ஸ்டாட்டர் என எதுவாக வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்