தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Palak Paneer Oothappam : பாலக் பன்னீர் கிரேவி தெரியும், அதில் ஊத்தப்பம் செய்ய முடியுமா? புதுசா இருக்கே!

Palak Paneer Oothappam : பாலக் பன்னீர் கிரேவி தெரியும், அதில் ஊத்தப்பம் செய்ய முடியுமா? புதுசா இருக்கே!

Priyadarshini R HT Tamil
Jun 25, 2023 12:26 PM IST

Palak Paneer Oothappam : இந்த புதிய பாலக் பன்னீர் ஊத்தப்பம் செய்வதற்கும் எளிதான ஒன்று. நீங்கள் இட்லி, தோசை மாவு அரைக்க மறந்துவிட்டால் இந்த இன்ஸ்டன்ட், ஈஸி ஊத்தப்பத்தை செய்து கொடுத்து அசத்தலாம். அந்த டாப்பிங்கில் உள்ள பன்னீர் நன்றாக வெந்து ஒரு நல்ல சுவை மற்றும் மணத்தை இந்த உணவுக்கு கொடுக்கும்

பாலக் பன்னீர் ஊத்தப்பம்
பாலக் பன்னீர் ஊத்தப்பம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு இந்த பாலக் பன்னீர் ஊத்தப்பம் உங்களுக்கு உதவும். இந்த ஊத்தப்பம் உங்களுக்கு எடை குறைக்கவும் உதவும். மேலும் பன்னீரில் கால்சியம் சத்து உள்ளது. இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பாலக் கீரை மசியல் - 1 கப்

ரவை - 1 கப்

தயிர் - அரை கப்

ப்ரூட் சால்ட் - 1 பாக்கெட்

உப்பு தேவையான அளவு

பன்னீர் துருவியது - அரை கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - பொடியாக நறுக்கியது

ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், உப்பு, கீரை மசியல் ஆகிய அனைத்தையும் கொட்டி கலந்துகொள்ள வேண்டும்.

தண்ணீர் ஊற்றி தோசை பதம் வரும் வரை மாவை நன்றாக கலக்கி, மூடியிட்டு ஊறவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், துருவிய பன்னீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்ந்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, ஊறிய மாவை எடுத்து மொத்தமாக ஊற்றி, மற்றொரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள பன்னீர் உள்ளிட்ட டாப்பிங் பொருட்களையும் அதில் ஸ்பிரட் செய்து நன்றாக தோசை திருப்பும் கரண்டியை வைத்து அழுத்திவிடவும்.

எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருபுறமும் நன்றாக வேக வைத்தால் தயாராகிவிடும் பாலக் பன்னீர் தோசை. இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய், தக்காளி சட்னி அல்லது சாம்பார் என எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

ரவை கலவையில் தேவைப்பட்டால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இட்டி, தோசை மாவு கூட சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த புதிய பாலக் பன்னீர் ஊத்தப்பம் செய்வதற்கும் எளிதான ஒன்று. நீங்கள் இட்லி, தோசை மாவு அரைக்க மறந்துவிட்டால் இந்த இன்ஸ்டன்ட், ஈஸி ஊத்தப்பத்தை செய்து கொடுத்து அசத்தலாம். அந்த டாப்பிங்கில் உள்ள பன்னீர் நன்றாக வெந்து ஒரு நல்ல சுவை மற்றும் மணத்தை இந்த உணவுக்கு கொடுக்கும் என்பதால், உங்கள் வீடுகளின் அருகில் உள்ளவர்கள் நீங்கள் என்ன புது ரெசிபி செய்திருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்