தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Uterine Cancer : கருப்பை புற்றுநோய் என்றால் கலங்க வேண்டாம் - அறிகுறி, நோய் கண்டறிதல், சிகிச்சை என்ன தெரிந்துகொள்ளுங்கள்!

Uterine Cancer : கருப்பை புற்றுநோய் என்றால் கலங்க வேண்டாம் - அறிகுறி, நோய் கண்டறிதல், சிகிச்சை என்ன தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2023 08:46 AM IST

Uterine Cancer : காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், ப்ரவுன் அரிசி ஆகியவை அதிகளவில் உணவு சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

கருப்பை கேன்சரை விளக்கும் படம்
கருப்பை கேன்சரை விளக்கும் படம்

ட்ரெண்டிங் செய்திகள்

உடலுறவுக்குப்பின் வலி ஏற்படும். வழக்கத்திற்கு மாறான, அதிக்கபடியான உதிரப்போக்கு என மாதவிடாய் படாய்படுத்தும். கடுமையான மன உளைச்சல் ஏற்படும். வலி, வலி என்று உயிர்போகக்கூடிய அளவுக்கு வலி, சோர்வு, மனஅழுத்தம் ஆகியவை ஏற்படும்.

இடுப்பு வலி, மாதவிடாயில் அதிக உதிரப்போக்கு, மெனோபாசுக்கு பின் ரத்தப்போக்கு, உடலுறவின்போது கடுமையான வலி, மாதவிடாயில் பிரச்னைகள் என்று எது ஏற்பட்டாலும் உடனே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிக, மிக அவசியம். ஏனெனில் இவைதான் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள். கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களாக கருப்பையில் உள்ள செல்கள் மரபணுவில் உருமாற்றம் அடைந்து, அவை இயல்பான செல்களையும் மாற்றிவிடுகின்றன. இதுவே கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு மிக முக்கியமாக காரணங்களாக கூறப்படுகிறது. இந்த செல்கள் அதிகளவில் வளர்ந்து, எண்ணிலடங்காமல் கட்டியை ஏற்படுத்துகிறது. இது உடலின் மற்ற பாகங்களை மாற்றியமைக்கிறது.

கருப்பை புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் காரணிகளாக, சிறு வயதிலேயே பூப்படைதல், உடல் பருமன், கருத்தரிக்காமை, டாமோக்ஷிஃபென் மாத்திரைகள் அதிகம் உட்கொள்வது போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயை கண்டுபிடிக்கும் முறைகளாக, மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை மற்றும் லேப் பரிசோதனைகள் உதவுகிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருப்பை குறத்து ஆய்வு செய்ய உதவுகிறது. செல்களை ஆய்வக ஆய்வுக்கு உட்படுத்தியும் இந்த நோய் குறித்து அறிய முடியும்.

இதற்கான சிசிச்சைகளாக, புற்றுநோயின் நிலையை பொறுத்து அமைகிறது. கீமோதெரபி, அறுவைசிகிச்சை, ரேடியேசன், ஆரம்பத்திலே கண்டுபிடித்தல் ஆகியவை நோய் குணமடைய உதவுகிறது.

எப்படி தடுக்க முடியுமென்றால், ஓராண்டுக்கு குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் அதிகரிப்பதை தடுக்க முடியும். உடல் பருமனை குறைப்பது மூலம் தடுக்க முடியும். வழக்கமான உடற்பயிற்சி செய்யும்போது கருப்பை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், ப்ரவுன் அரிசி ஆகியவை அதிகளவில் உணவு சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

கருப்பை புற்றுநோய் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடிந்த ஒன்று, மருத்துவர் எளிதாக, ஆய்வக பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கக்கூடிய ஒன்று. சில மாதங்களுக்கு வரும், 50 வயதுக்கு மேல் வரக்கூடியது. இதற்கு உடனடி சிகிச்சை தேவை. எனவே அறிகுறி ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது.

WhatsApp channel

டாபிக்ஸ்