தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nuts To Reduce Weight : உடல் எடை குறைய உதவும் நட்ஸ் வகைகள் – முயற்சி செய்து பாருங்களேன்!

Nuts to Reduce weight : உடல் எடை குறைய உதவும் நட்ஸ் வகைகள் – முயற்சி செய்து பாருங்களேன்!

Priyadarshini R HT Tamil
Aug 05, 2023 11:46 AM IST

Nuts to reduce weight : நட்ஸ்கள் சுவை மிகுந்தவை மட்டுமல்ல உங்கள் எடை குறைப்பு பயணத்துக்கு உதவக்கூடியவை. நட்ஸ்களில் போதிய சத்துக்களும், உடலுக்கு தேவையான கொழுப்புகளும் உள்ளன. நட்ஸ்களால் உங்கள் விரைவான எடை இழப்புக்கு உதவ முடியும்.

நட்ஸ்கள்
நட்ஸ்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

உடல் எடை குறைப்பது முதல் நீரிழிவு, இதய நோய் போன்றவற்றை வராமல் தடுக்கும் சக்தி நட்ஸிற்கு உள்ளது. மேலும் நட்ஸை உணவில் சேர்த்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது.

இத்தகைய நட்ஸில் பல வகைகள் உள்ளன. அதில் வால்நட், பாதாம், பிஸ்தா போன்றவற்றில் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் அடங்கியுள்ளது. அதேபோல் பிரேசில் நட்ஸ், வேர்க்கடலை போன்றவற்றிலும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக நட்ஸ் ஆண்களுக்கு மிகவும் நல்லது. அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளலாம். 

நட்ஸ்கள் சுவை மிகுந்தவை மட்டுமல்ல உங்கள் எடை குறைப்பு பயணத்துக்கு உதவக்கூடியவை. நட்ஸ்களில் போதிய சத்துக்களும், உடலுக்கு தேவையான கொழுப்புகளும் உள்ளன. நட்ஸ்களால் உங்கள் விரைவான எடை இழப்புக்கு உதவ முடியும்.

பாதாம் – புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. பாதாம் சாப்பிடுவது உங்களுக்கு வயிறு நிறைந்ததுபோன்ற உணர்வை கொடுக்கும். அதனால், உங்களுக்கு அடிக்கடி சாப்பிடும் எண்ணத்தை ஏற்படுத்தாது. மேலும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

வால்நட்ஸ் – வால்நட்டில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. மேலும் தேவையான சத்துக்களும் உள்ளது. கொழுப்பை எரிக்கும் சக்தியை உருவாக்குகிறது. வீக்கத்தை தடுக்கிறது. இவையும் பசியை கட்டுப்படுத்தி சத்தில்லா உணவு சாப்பிடுவதை தடுத்து வைக்கிறது.

பிஸ்தா – இதில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடை குறைப்பு சிறந்த ஸ்னாக்ஸாக உள்ளது. ஆனால், அதிக பிஸ்தாக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிரேசில் நட்ஸ் – பிரேசில் நட்ஸி, நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் செலினியம் உள்ளது. அது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உங்களை தைராய்டில் இருந்து காக்கிறது.

முந்திரி – மற்ற நட்ஸ்களை விட நமது கிச்சனில் அதிகம் நிறைந்திருப்பது. இதில் மெக்னீசிய சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. அது உங்களுக்கு பசி உணர்வை கட்டுப்படுத்தி வைத்து உங்கள் உடல் எடை குறைக்க உதவுகிறது. உங்கள் எடை குறைப்பு பயணத்தில் சிறந்த உணவாக இந்த நட்ஸ்கள் உள்ளன.

WhatsApp channel

டாபிக்ஸ்