வழக்கமான தோசை அல்ல; இது புரதச்சத்துக்கள் நிறைந்தது! எப்படி செய்வது என்று பாருங்கள்!
வழக்கமான தோசை அல்ல, இது புரதச்சத்துக்கள் நிறைந்தது. இதை என்னென்ன பருப்புகள் சேர்த்து செய்யலாம் என்று பாருங்கள். இதை அடையாகவும் செய்யலாம். மூடிவைத்து ஊத்தப்பமாகவும், வெங்காயம் நறுக்கி சேர்த்து வெங்காய அடை மற்றும் ஊத்தப்பமாக சாப்பிட்லாம். எப்படி செய்வது என்று பாருங்கள்!
நமது உடலுக்கு புரதம் ஏன் தேவை?
உங்கள் உடலுக்கு புரதம் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. செல்களை குணப்படுத்தவும், செல்கள் சரியாக வேலை செய்யவும் உதவுகிறது. புரதச்சத்து எண்ணற்ற உணவுகளின் வழியாக உங்களுக்கு கிடைக்கிறது. உங்களுக்கு தினமும் புரதச்சத்துக்கள் தேவை. உங்கள் உடல் எடை, வயது, பாலினம் மற்றும் உடல்நிலையைப் பொறுத்து எவ்வளவு புரதச் சத்துக்கள் தேவை என்பது தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் புரதத் தேவையை நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் உண்ணும் சைவ மற்றும் அசைவ உணவுகளில் இருந்து உங்களுக்கு தேவையான அளவு புரதச்சத்துக்கள் கிடைக்கிறது. இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள், விதைகள் மற்றும் நட்ஸ்கள், பருப்புகள், கொட்டைகளில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
புரதம் அமினோ அமிலங்களால் ஆனது. புரதத்தில் 20க்கும் மேற்பட்ட அமினோஅ மிலங்கள் பல்வேறு சேர்க்கைகளில் ஒன்றாக பிணைந்துள்ளது. உங்கள் உடல் அவற்றை பயன்படுத்தி புதிய புரதத்தை உருவாக்கும். அவைதான் எலும்புகள், தசைகள் மற்றும் எண்சைம்கள், ஹார்மோன்கள் எனும் மற்ற உட்பொருட்கள். அதை ஆற்றல் மூலமாகவும் பயன்படுத்த முடியும். சில அமினோ அமிலங்களை உங்கள் உடல் உருவாக்கும். உங்கள் உடலால் உற்பத்தி செய்ய முடியாத அமினோ அமிலங்களை உடல் புரதச் சத்துக்களில் இருந்து பெறுகிறது. எனவே புரதச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை நீங்கள் உடல் இயங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
புரதச்சத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதில் உள்ள அமினோ அமிலங்களின் அளவைப்பொறுத்து அளவிடப்படுகிறது. அசைவ உணவுகளில் அதிகளவில் முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் இவை உயர்தர புரம் என்று அழைக்கப்படுகிறது.
சோயா பொருட்கள், குயினோவா மற்றும் கீரைகளில் அதிகளவில் முக்கிய அமினோ அமிலங்கள் நிறைய உள்ளன.
பீன்ஸ்கள், பருப்புகள், முழுதானியங்கள் மற்றும் நட்ஸ்களில் முக்கியமான அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் தங்களின் புரத தேவைக்கு உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
இதோ இங்கு ஒரு புரதச்சத்துக்கள் நிறைந்த தோசை ரெசிபி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான தோசையைடவிட இது வித்யாசமானது மற்றும் இது உங்களுக்கு தேவையான புரதச்சத்துக்களைக் கொடுக்கிறது.
புரத தோசை செய்ய தேவையான பொருட்கள்
அரிசி – 2 கப் (இட்லி அரிசியை எடுத்துக்கொள்ளலாம்)
வெள்ளை கொண்டைக்கடலை – கால் கப்
கருப்பு கொண்டைக்கடலை – கால் கப்
பச்சைப்பயிறு – கால் கப்
துவரம் பருப்பு – கால் கப்
உளுந்து – அரை கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
இவையனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக அலசிவிட்டு ஒன்றாகவே சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் வரை ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
அரைக்கும் முன் சேர்க்கவேண்டிய பொருட்கள்
தக்காளி - 1
வரமிளகாய் - 3
சீரகம் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – சிறிது
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
இஞ்சி – கால் இன்ச்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஊறிய பொட்களுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து 2 மணி நேரம் வைத்துவிடவேண்டும்.
இதில் தோசை செய்யலாம் அல்லது அடை கூட செய்யலாம். கொஞ்சம் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து தோசை அல்லது அடை வார்க்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள அவியல், தேங்காய் சட்னி, சாம்பார், மிளகாய்ச் சட்னி எதுவும் சுவையானதாக இருக்கும். சிலருக்கு அடைக்கு வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்.
எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து உங்களுக்கு போர் அடித்துவிட்டால், இதுபோன்ற புரதச்சத்துக்கள் நிறைந்த தோசையை செய்து சாப்பிடலாம். இதை நீங்கள் காலையில் உணவாக பரிமாறிவிட்டால், இது உங்களுக்கு நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலைத் தரும்.
இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்களே அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்