அரிசியில் மட்டுமில்லை, இனி கோதுமை ரவையிலும் பிசிபேலாபாத் செய்யலாம்! எப்படி பாருங்கள்!
கோதுமை ரவை பிசிபேலாபாத் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - ஒரு கப்
துவரம் பருப்பு - முக்கால் கப்
புளி – சிறிதளவு
(சூடான நீரில் ஊறவைத்து, கரைத்து வடித்து புளித்தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்)
கேரட் – 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
பச்சைப் பட்டாணி – கால் கப்
பீன்ஸ் – 6 (பொடியானக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
சின்ன வெங்காயம் – 8 (மிகச் சிறியதாக தேர்ந்தெடுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
வர மிளகாய் – 4
மல்லித்தழை – கைப்பிடியளவு
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கோதுமை ரவை, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி, குக்கரில் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து வைத்து 4 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். இதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு வரமிளகாய், வரமல்லி, கடலை பருப்பு, சீரகம், ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துவிட்டு, கடைசியாக தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து, ஆறவைத்து, காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து பொடியாக அடித்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகலடான கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அடுத்து காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வேகவைக்கவேண்டும்.
அது நன்றாக வெந்தவுடன் சம்பார் பொடி, தேவையான அளவு உள்ள மற்றும் அரைத்து வைத்துள்ள காய்கறிகள் சேர்த்து இவற்றையெல்லாம் வேகவைத்து, கடைசியாக வேகவைத்த பருப்பு-கோதுமை ரவை கலவையை சேர்த்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் கூடுதலாக தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
காய்கறிகளை தனியாகவேகவைத்தும்கொள்ளலாம். இதில் சேர்த்து வேகவைக்கும்போது, மசாலாக்களின் சுவை காய்கறிகளில் ஏறி நன்றாக இருக்கும். கொஞ்சம் தளர்வான பதத்திலே இறக்கிவிடவேண்டும்.
தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து, கடுகு, வெந்தயம் தாளித்து, வேர்க்கடலையையும் சேர்த்து வறுத்து சாதத்தில் சேர்க்கவேண்டும். மேலே மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான கோதுமை ரவை பிசிபேலாபாத் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள காராபூந்தி, அப்பளம் மட்டுமே போதுமானது. சூப்பர் சுவை நிறைந்ததாக இந்த பிசிபேலாபாத் இருக்கும். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.
இது ப்ரேக் ஃபாஸ்ட், லன்ச் மற்றும் டின்னர் மூன்று வேளைக்கும் ஏற்றது. சூடாக சாப்பிட சுவை அள்ளும். அரிசியில் மட்டுமல்ல கோதுமை ரவையிலும் பிசிபேலாபாத் செய்ய முடியும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்