கோதுமை மாவில் இப்படி ஒரு ஸ்னாக்ஸ்; இனிப்பு, காரம் இரண்டிலும் அசத்தல் சுவையாக இருக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கோதுமை மாவில் இப்படி ஒரு ஸ்னாக்ஸ்; இனிப்பு, காரம் இரண்டிலும் அசத்தல் சுவையாக இருக்கும்!

கோதுமை மாவில் இப்படி ஒரு ஸ்னாக்ஸ்; இனிப்பு, காரம் இரண்டிலும் அசத்தல் சுவையாக இருக்கும்!

Priyadarshini R HT Tamil
Dec 02, 2024 03:01 PM IST

கோதுமை மாவில் சிப்ஸ் செய்வது எப்படி?

கோதுமை மாவில் இப்படி ஒரு ஸ்னாக்ஸ்; இனிப்பு, காரம் இரண்டிலும் அசத்தல் சுவையாக இருக்கும்!
கோதுமை மாவில் இப்படி ஒரு ஸ்னாக்ஸ்; இனிப்பு, காரம் இரண்டிலும் அசத்தல் சுவையாக இருக்கும்!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்

வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

ஓமம் – அரை ஸ்பூன்

சமையல் சோடா – ஒரு சிட்டிகை அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு (எனவே தாராளமாக எடுத்துக்கொள்ளவேண்டும்)

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வெண்ணெய், ஓமம், சமையல் சோடா என அனைத்தும் சேர்த்து நன்றாக பிசையவேண்டும். இதில் தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவேண்டும். இப்போது கையில் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை உருண்டையாக்கி, சப்பாத்தி கட்டை அல்லது கல்லில் தேய்த்து, பரத்திக்கொள்ளவேண்டும். இதை டைமண்ட் வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துகொள்ளவேண்டும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் சேர்த்து அது கொதித்தவுடன், அதில் வெட்டி வைத்த இந்த கோதுமை மாவுத்துண்டுகளை சேர்த்து பொரித்து நன்றாக மொறுமொறுவென ஆனவுடன் எடுத்தால், கோதுமை மாவு சிப்ஸ்கள் தயார்.

இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். இப்போது மழை பெய்யும் வேளையில் மழையை ரசித்துக்கொண்டே இந்த சிப்ஸை சாப்பிடலாம். அதிகம் செய்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்து சாப்பிடலாம்.

இதில் ஓமத்துக்குப் பதில் கொஞ்சம் அதிகளவில் சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தால் இனிப்பு சிப்ஸ் தயார். அடுத்து மைதா மாவிலும் இதை செய்ய முடியும். அதிலும் இனிப்பு, காரம் என இரண்டு வகைகளாக செய்ய முடியும். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் ஆகும்.

கோதுமை மாவில் உங்கள் உடலுக்குத் தேவையான எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உங்கள் செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. காரமாக செய்யும்போது, இந்த ஸ்னாக்ஸை சாப்பிட தயங்கவேண்டாம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ஸ்னாக்ஸை கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.