தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nendhiram Chips : கேரளா ஸ்பெஷல்! நேந்திரம் சிப்ஸ்! ஈசியா வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!

Nendhiram Chips : கேரளா ஸ்பெஷல்! நேந்திரம் சிப்ஸ்! ஈசியா வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Nov 13, 2023 10:00 AM IST

Nendhiram Chips : சிப்ஸ் என்றாலே அது ஏதோ கடையில் மட்டுமே வாங்கக்கூடிய ஒன்று என்று எல்லோரும் நினைத்திருப்போம். ஆனால் நேந்திரம் சிப்ஸை எளிதாக வீட்டிலே செய்யலாம்.

Nendhiram Chips : கேரளா ஸ்பெஷல்! நேந்திரம் சிப்ஸ்! ஈசியா வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!
Nendhiram Chips : கேரளா ஸ்பெஷல்! நேந்திரம் சிப்ஸ்! ஈசியா வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இரும்புச் சத்து குறைபாட்டு நோயான ரத்த சோகை உள்ளவர்கள் நேந்திரம் பழத்தை தொடர்ந்து எடுத்து வரவேண்டும். நேந்திரம் வாழை பழம் சருமத்திற்கு நல்ல பொலிவை தருகிறது. எனவே சருமம் பொலிவு பெற நேந்திரம் பழத்தை தினமும் சாப்பிடவேண்டும். மேலும் நேந்திரம் பழத்தை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி நோயும் குணமாகிறது.

எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நேந்திரம் பழத்தை அடிக்கடி கொடுத்து வருவது நல்லது. அவர்கள் நன்றாக தூங்க அது உதவும். குழந்தைகளின் உடலில் புது ரத்தம் உற்பத்தியாகவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகிறது.

இருமல் தொல்லை முற்றிலும் நீங்க பழுத்த நேந்திரம் பழம், மிளகு, பால் இம்மூன்றையும் இரவில் சாப்பிடவேண்டும். நேந்திரம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுவடைந்து, இதய நோய்களில் இருந்து விடுபட உதவுகிறது. இதயம் சீராக செயல்பட தேவையான அனைத்து சத்துக்களும் நேந்திரம் பழத்தில் உள்ளன.

நேந்திரம் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

நேந்திரம் காய் – 3 முதல் 6

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

உப்பு – ஒரு ஸ்பூன்

தண்ணீர் – சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – சிப்ஸ் பொரிக்க தேவையான அளவு

(தேங்காய் எண்ணெய் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டால்தான் கேரளாவில் கிடைக்கும் நேந்திரம் சிப்ஸின் சுவை வரும்)

நேந்திரம் சிப்ஸ் கேரளாவில் மிகவும் பிரபலம். நேந்திரம் சிப்ஸ் மட்டுமின்றி, நேந்திரம் பழம், அதில் இருந்து தயாரிக்கப்பகடும் பலவகை ஸ்னாக்ஸ் ஐட்டங்களும் கேரளாவில் பிரபலம். கேரள மக்கள் நேந்திரம் வாழைக்காய், பழம் என அனைத்தையும் விரும்பி உண்பார்கள். அதனால்தான் ஓண சத்யாவில் நேந்திரம் சிப்ஸ்க்கு தனியிடம் உண்டு.

செய்முறை

நேந்திரம் பழத்தை தோல் நீங்கி எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கமான முறையில் பீலர் வைத்து தோலை நீக்கக்கூடாது. தனியாக உறித்து எடுக்க வேண்டும்.

தண்ணீரில் மஞ்சள் மற்றும் உப்பு கரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் நேரடியாக வாழைக்காய் சிப்ஸ் சீவும் கட்டையைப் பயன்படுத்தி கொதிக்கும் எண்ணெயில் கவனமாக சீவிவிடவேண்டும். கொதிக்கும் எண்ணெயில் சீவும்போது மிக கவனமாக சீவிவிடவேண்டும். சூடான எண்ணெய் கைகளில் தெளித்துவிடக்கூடாது.

சிப்ஸ் எண்ணெயில் பாதி பொரிந்தவுடன், கலக்கிவைத்துள்ள உப்பு, மஞ்சள் தண்ணீர் சேர்க்கவேண்டும். கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் சேர்க்கும்போது சொடசொட வென்ற சத்தத்துடன் எண்ணெய் சிதறும் அப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த உப்புதான் சிப்ஸில் உப்பையும், சிப்ஸ்க்கு மஞ்சள் நிறத்தையும் வழங்குகிறது. சிப்ஸ் முழுவதும் பொரிந்தவுடன் அதை அப்படியே வடிக்கட்டி எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் சிப்ஸில் ஒட்டியிருக்கும் எண்ணெய் முழுவதும் வடிகட்டப்படும்.

தேவைப்பட்டால் மிளகு அல்லது மிளகாய் தூள் தூவி சாப்பிடலாம் அல்லது அப்படியே சாப்பிட்டாலும் சுவை நன்றாகவே இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்