தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  National Protein Day: உடல் வளர்ச்சியில் புரதம்-இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

National Protein Day: உடல் வளர்ச்சியில் புரதம்-இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

Manigandan K T HT Tamil
Feb 27, 2023 12:00 PM IST

இன்று தேசிய புரதச்சத்து தினம் (பிப்.27) ஆகும். புரதச் சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

புரதச் சத்து நிறைந்த உணவுகள்
புரதச் சத்து நிறைந்த உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுவதுடன், எலும்பு, தசைகள், தோல், முடி ஆகியவற்றின் பராமரிப்புக்கும் புரோட்டீன் எனப்படும் புரதம் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது.

திசுக்களை உருவாக்குவதிலும், ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்துவதிலும் புரதச் சத்து முக்கியப் பங்காற்றுகிறது.

தினமும் சரியான அளவு புரதச் சத்தை எடுத்துக் கொள்ளத் தவறுவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

தேசிய புரத தினத்தில் நாம் புரதச் சத்தை வழங்கும் உணவுகள் குறித்து பார்ப்போம். நீங்கள் சைவ உணவு மட்டும் அல்லது அசைவ உணவு உண்பவர்கள் என்றாலும் புரதம் நிறைந்த உணவுகள் நிறைய இருக்கின்றன.

HT Lifestyle பகுதிக்காக BUILD, சிஇஓ செளமவா சென்குப்தா அளித்த சில டிப்ஸ்களை பார்ப்போம்.

சிக்கன், மீன், பருப்பு வகைகள் ஆகியவற்றில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அவற்றில் கொழுப்பு குறைவாகவே உள்ளது. அதேநேரம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி 12 போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகள் உள்ளன.

டோஃபு, டெம்பே மற்றும் விதைகள் போன்ற தாவர அடிப்படையிலான புரதங்கள் சைவ உணவை நேசிப்பவர்களுக்கு சிறந்த ஒன்றாக திகழ்கிறது.

முட்டையில் அதிக புரதம் நிறைந்துள்ளது. அத்துடன், வைட்டமின் டி, வைட்டமின் பி12, கோலின் ஆகியவை உள்ளன. எனவே, தினசரி உணவில் முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.

முட்டை
முட்டை

புரோட்டீன் பவுடர்/whey proteins உங்கள் டயட்டில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவை நல்ல தரமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

தினசரி உணவு தயார் செய்வதற்கு திட்டமிடும்போதே புரதச்சத்து நிறைந்த உணவை சேர்க்க திட்டமிடுங்கள்.

கிரீக் யோகர்ட், ஸ்டிரிங் சீஸ் போன் ஸ்னாக்ஸை சாப்பிடுவதன் மூலமாகவும் கூடுதலாக புரதச் சத்தை நாம் பெற முடியும்.

போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் அவசியம் ஆகும். அப்போதுதான் சரியாக ஜெரிமானம் நடந்து புரோட்டீன் போன்ற சத்துகள் உடலுக்கு முழுமையாக சென்றுசேரும். குறைந்தது தினமும் 8 கப் தண்ணீர் குடியுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்