Myths About Foods : கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும்! கட்டுக்கதையா? உண்மையா?
Myths About Foods : உணவு தொடர்பாக தொடர்ந்து காலங்காலமாக கூறப்பட்டுவரும் கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
எனவே இந்த கட்டுக்கதைகளை இப்போதே தெரிந்துகொள்ளுங்கள்
ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இந்த நாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைவு பிரச்னைகள்தான் காரணம் என்று நம்பப்படுகிறது. இந்த கட்டுக்கதைகளும் ஒரு முக்கிய காரணம். எனவே இதுபோன்ற கட்டுக்கதைகளை நாம் உடைக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது. அதற்கு முக்கிய காரணமான ஊட்டச்சத்துக்களை உணவுகள் மூலம் பெறப்படவேண்டியது வலியுறுத்தப்படுகிறது.
கட்டுக்கதை
பின்னரவில் உணவு உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்?
நாள் முழுவதும் நீங்கள் ஒட்டுமொத்தமாக எவ்வளவு கலோரி உணவுகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்து, உங்கள் உடல் எடை அதிகரிக்கும். சரிவிகிதமான நொறுக்குத்தீனிகளை உறங்கச்செல்லும் முன் சாப்பிடுவது உங்கள் உடலில் ரத்தச்சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவும். உங்கள் உறக்கத்தை மேம்படுத்தும்.
கட்டுக்கதை
கார்போஹைட்ரேட் உங்களுக்கு எதிரி
கார்போஹைட்ரேட்கள் உங்கள் உடலுக்கு மிகவும் அத்யாவசியமானதாகும். உங்கள் உடலுக்கு ஆற்றலையும், உங்கள் மூளை இயங்கவும் உதவுகிறது. முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற கார்போஹைட்ரேட்களில் ஆற்றலும், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
கட்டுக்கதை
கொழுப்பு உங்கள் உடல் பருமனை அதிகரிக்கும்
அவோகேடோ, நட்ஸ்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் செல்கள் இயங்கவும், ஹார்மோன்கள் இயங்கவும் முக்கியமானது. ஆனால் நீங்கள் அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அன்சாச்சுரேடட் கொழுப்பு மற்றும் டிரான்ஸ்ஃபேட் உணவுக்கு மிகவும் சிறந்தது.
கட்டுக்கதை
அனைத்து கலோரிகளும் சமமாக உருவானது
தரம் மிகவும் முக்கியம், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். கலோரிகளை கணக்கில்கொள்ள வேண்டிய தேவையில்லை. நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், நுண் ஊட்டச்சத்துக்கள் அடர்த்தி ஆகியவை குறித்து கணக்கில்கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை
உணவு உண்ணாமல் இருந்தால் உடல் எடை குறையும்
ஒருவேளை உணவை தவிர்த்தால், நீங்கள் பின்னர் சாப்பிடும்போது, அதிகளவு உணவு உட்கொள்வதை ஊக்குவித்து, உங்களின் உடல் வளர்சிதை மாற்றத்தை தடுக்கும். எனவே சரியான இடைவெளியில் சரியான அளவு உணவு உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்களை இடையிடையே எடுத்துக்கொள்வது, உங்கள் உடல் வளர்சிதைக்கும், ஆற்றல் அளவுக்கும் நல்லது.
கட்டுக்கதை
பழச்சாறுகள் அல்லது கழிவு நீக்க சாறுகள் அல்லது உணவுகள் பயன்படுத்தி கழிவுகளை நீக்கவேண்டும்
உடல் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நணநீர் மண்டலம் ஆகியவை வழியாக உடல் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்கிறது. எனவே பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு உணவுகளை உட்கொண்டு, உங்கள் உடலின் இயற்கை கழிவுநீக்கத்துக்கு உதவுங்கள்.
கட்டுக்கதை
முட்டையின் மஞ்சள் கருக்கள், அதில் உள்ள கொழுப்புகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன
முட்டை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. அதில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. சிலருக்கு, ரத்தக் கொழுப்பு அளவுகளுடன், உணவு கொழுப்புகள் குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கட்டுக்கதை
குளூட்டன் இல்லாத உணவுகள் என்றால் ஆரோக்கியம்
சிலருக்கு குளூட்டன் அலர்ஜி இருக்கும், அவர்கள் குளூட்டன் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் குளூட்டன் இல்லாத உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளாகவே இருப்பதால், அவற்றில் அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை.
கட்டுக்கதை
உங்கள் உடலின் குறிப்பிட்ட பாகத்தில் இருந்து கொழுப்பை குறைக்கலாம்
குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது கடினம். கொழுப்பை குறைப்பதற்கு உடற்பயிற்சி கட்டாயம் தேவை. இதயத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் சரிவிகித உணவு உட்கொண்டு, உங்கள் உடலின் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்.
கட்டுக்கதை
கார்போஹைட்ரேட்களை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடியாது
உங்களுக்கு தேவையான கார்போஹைட்ரேட்களை சரிவிகித அளவில் உணவில் சேர்ப்பது உங்கள் உடலுக்கு நல்லது. எனவே முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்து, ஒட்டுமொத்த கலோரிகளின் அளவை கண்காணித்து, உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.