Hemoglobin Level : மாத்திரைகளை தூக்கி வீசுங்கள்; உடலில் ரத்தம் ஊற இந்த ஒரு சூப் மட்டுமே போதும்!
Hemoglobin Level : முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு மிகுந்த தொல்லையை கொடுக்கும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது பலன் தரும்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை – 2 கைப்பிடி
பாசிபருப்பு – கால் கப்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
மிளகு – 5
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை –
முருங்கைக்கீரை, பாசிபருப்பு, பூண்டு ,சின்னவெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகு ஆகிய அனைத்தையும் ஒரு குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதையும் சூப்பில் சேர்த்து, வடித்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் கலந்து, மல்லித்தழை தூவி அடுப்பில் வைத்து சிறிது சூடேற்றி அப்படியே பருகவேண்டும்.
இரும்புச்சத்துக்கள் நிறைந்தது. இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விடவும் இது மிகவும் நல்லது. இதை தினமுமே பருகலாம்.
முருங்கைக்கீரையில் உள்ள நன்மைகள்
முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை. இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, சி ஆகிய சத்துகள் அதிகமாக உள்ளன.
முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சாப்பிடலாம். எலும்புகளும், பற்களும் வலுப்பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
அதேபோல் முருங்கையின் ஈர்க்கும்கூட மருத்துவ குணம் நிறைந்தது. எனவே சூப் போன்றவை தயாரிக்கும்போது முருங்கைக்கீரையுடன் அதன் ஈர்க்கையும் சேர்த்து வேகவைத்துக்கொள்ளலாம்.
எனவே முருங்கைக்கீரையை வாரத்தில் ஒருநாள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் சூப் செய்தும் சாப்பிடலாம்.
அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை இந்தக்கீரை கொடுக்கிறது. உடல் வலி ஏற்பட்டால் முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடிக்கலாம்.
குழந்தை பெற்ற தாய்மாருக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் சுரக்க முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே போதும். எனவே குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முருங்கைக்கீரையை சமைத்து கொடுக்க வேண்டும்.
மேலும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தாய்மாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும். அதாவது வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளை தாய்மார் சாப்பிட்டால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு மிகுந்த தொல்லையை கொடுக்கும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது பலன் தரும்.
குழந்தையின்மை, ஆண்மைக்குறை பிரச்னை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல், முருங்கைப்பூவையும் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கைப்பூவை பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு போதுமான பலம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்