தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mutton Gravy Masala Do You Want Fragrant Mutton Gravy This One Spice Is Enough

Mutton Gravy Masala : மணமணக்கும் மட்டன் குழம்பு வைக்க வேண்டுமா? இந்த ஒரு மசாலா போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 18, 2024 07:06 PM IST

Mutton Gravy Masala : ஆட்டிறைச்சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு. அசைவ பிரியர்களின் முதல் தேர்வில் இருப்பது இந்த ஆட்டிறைச்சி தான். இதில் உள்ள சிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

Mutton Gravy Masala : மணமணக்கும் மட்டன் குழம்பு வைக்க வேண்டுமா? இந்த ஒரு மசாலா போதும்!
Mutton Gravy Masala : மணமணக்கும் மட்டன் குழம்பு வைக்க வேண்டுமா? இந்த ஒரு மசாலா போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

சோம்பு – 2 ஸ்பூன்

சீரகம் – 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 15

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன்

துருவிய தேங்காய் – கால் கப்

மசாலா தயாரிப்பது எப்படி?

மிளகு, சோம்பு, சீரகம், சின்னவெங்காயம், கறிவேப்பிலை என அனைத்தும் சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து பொட்டுக்கடலை சேர்த்து சிறிது நேரம் வறுக்க வேண்டும். 

பொட்டுக்கடலையை கடைசியாகத்தான் சேர்க்க வேண்டும். இறக்கும் முன் துருவிய தேங்காயை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி உடனே அடுப்பை அணைத்துவிடவேண்டும். பின்னர் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும்.

குழம்பு வைக்க தேவையான பொருட்கள்

எலும்பு கலந்த கறி – முக்கால் கிலோ

எண்ணெய் – 3 ஸ்பூன்

சோம்பு – கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

முழு கரம் மசாலா

பட்டை – 1

கிராம்பு – 2

முழு ஏலக்காய் – 1

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 1

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி, சோம்பு தாளிக்க வேண்டும். பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்க வேண்டும். அப்போதுதான் குழம்பு நல்ல கெட்டியாக வரும்.

அடுத்து கழுவிய கறியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

(கறிக்குழம்புக்கு சிலர் அதிக காரம் விரும்புவார்கள். அவர்கள் இன்னும் ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்த்துக்கொள்ளலாம்)

கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும். பின்னர் மல்லித்தழை சேர்த்து கறி வெந்தவுடன் இறக்க வேண்டும்.

இதை குக்கரில் வைத்தால் மூடிவைத்து 10 விசில் விட்டால் கறி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து முழு கரம் மசாலாப் பொருட்களை சேர்த்து தாளித்து கறிக்குழம்பில் சேர்க்க வேண்டும்.

சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இதுபோல் மசாலா அரைத்து வைக்கும் குழம்பை கட்டாயம் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

ஆட்டிறைச்சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு. அசைவ பிரியர்களின் முதல் தேர்வில் இருப்பது இந்த ஆட்டிறைச்சி தான். இதில் உள்ள சிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

இதில் உள்ள பி12 வைட்டமின், நரம்பு மண்டலம் சீராக இயங்கவும், ஆரோக்கியமான ரத்தத்துக்கு தேவையான இரும்புச்சத்தையும் வழங்கும்.

இதில் உள்ள இரும்புச்சத்துக்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். அனீமியாவை தடுக்கிறது. எனவே வாரத்தில் ஒருமுறை கட்டாயம் ஆட்டிறைச்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. வளரும் குழந்தைகளுக்கு ஆட்டின் எலும்பு மிகவும் நல்லது.

WhatsApp channel