தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mutton Chicken Masala Enjoy This Spicy Chicken Masala You Can Make Curry That Will Splash The Streets And Be Amazing

Mutton Chicken Masala : இந்த மசாலாப்பொடிய செஞ்சு வெச்சுக்கங்க! தெருவையே தெறிக்கவிடும் கறிக்குழம்பு செய்து அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Mar 23, 2024 11:04 AM IST

Mutton Chicken Masala : ஊரே மணக்கும் அளவு கறிக்குழம்பு செய்ய இந்த மசாலாப்பொடி உதவும்.

Mutton Chicken Masala : இந்த மசாலாப்பொடிய செஞ்சு வெச்சுக்கங்க! தெருவையே தெறிக்கவிடும் கறிக்குழம்பு செய்து அசத்தலாம்!
Mutton Chicken Masala : இந்த மசாலாப்பொடிய செஞ்சு வெச்சுக்கங்க! தெருவையே தெறிக்கவிடும் கறிக்குழம்பு செய்து அசத்தலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்

பட்டை – 2

ஏலக்காய் – 4

கிராம்பு – 15

ஸ்டார் சோம்பு – 1

கசகசா – அரை ஸ்பூன்

கல்பாத்தி – ஒரு ஸ்பூன்

பிரியாணி இலை – 3

புழுங்கல் அரிசி – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

மசாலா செய்முறை

ஒரு கடாயில் வரகொத்தமல்லி, சோம்பு, சீரகம், மிளகு என அனைத்தையும் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, கசகசா, ஸ்டார் சோம்பு, கல்பாத்தி, பிரியாணி இலை சேர்த்து குறைவான தீயில் வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் புழுங்கல் அரிசியை பொன்னிறமாகும் வரை வறுத்து, கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.

வறுத்த அனைத்தையும் ஒவ்வொன்றாக ஒரு தட்டில் சேர்த்து, ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் ஆறியவுடன், அதை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதை நீங்கள் செய்யும் மட்டன் சிக்கன் குழம்புடன் ஒரு ஸ்பூன் சேர்த்து வைத்தால் சுவை அள்ளும்.

இதை பயன்படுத்தி மட்டன் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஆட்டுகறி – முக்கால் கிலோ

சின்ன வெங்காயம் – கால் கிலோ

வர மல்லி விதை – 100 கிராம்

காய்ந்த மிளகாய் – 15

தேங்காய் துருவல் – ஒரு கப்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 10 பல்

இஞ்சி – விரல் நீள துண்டு

நல்லெண்ணெய் – 100 மில்லி லிட்டர்

உப்பு – தேவையான அளவு

சோம்பு – ஒரு ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

ஸ்டார் சோம்பு – 2

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

கரம் மசாலா - கால் ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மல்லித்தழை - ஒரு கைப்பிடி

செய்முறை –

கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் மல்லி, மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தையும் வதக்கி அதையும் அரைத்து கொள்ளவேண்டும்.

சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஸ்டார் சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் கறியை போட்டு நன்றாக வதக்கி கறி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவேண்டும்.

அதனுடன் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த மல்லி-மிளகாய் விழுது, அரைத்த சின்ன வெங்காய விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கறியை நன்றாக வேக விடவேண்டும்.

கறி வெந்தவுடன், அரைத்த தேங்காய் விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக தளதளவென கொதிக்கவிடவேண்டும்.

மசாலா பச்சை வாசம் போனவுடன் இறக்கவேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, கரம் மசாலா, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்தால் கமகமவென மணக்கும் கிராமத்து ஆட்டுகறி குழம்பு தயார்.

சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். மிளகாய் அளவை உங்கள் கார அளவுக்கு ஏற்ப குறைத்தோ அல்லது அதிகரித்தோ கொள்ளலாம்.

இதை இட்லி, தோசை, பூரி சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்