Drumstick Mutton Gravy : முருங்கை காய் போட்ட மட்டன் குழம்பு – அடிச்சுக்க முடியாத சுவை நாவை விட்டு நீங்காது!
Mutton Gravy : முருங்கைக்காய் போட்டு மட்டன் குழம்பு செய்திருக்கிறீர்களா? இதோ ரெசிபி. இப்டி செஞ்சு பாருங்களேன் டேஸ்ட் அள்ளும்.
தேவையான பொருட்கள்
எலும்போடு மட்டன் - கால் கிலோ
இளசான முருங்கைக்காய் – 3
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய் – ஒரு கப் (துருவியது)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கு.
செய்முறை
மட்டனை ஒரு குக்கரில் போட்டு 6 -7 விசில் விட்டு வேகவிட்டு தனியே வைக்கவும்.
ஒரு தக்காளி, ஒரு பச்சை மிளகாயை தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி - பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து அதை நன்கு குழைய வதக்கி உப்பு, மல்லி, மிளகாய், மஞ்சள் தூள்கள் சேர்த்து கிளறிவிட்டு பின் நறுக்கி வைத்த முருங்கைக் காய் சேர்த்து வதக்கவும்.
இப்போது வேக வைத்த மட்டனை வேக வைத்த நீரோடு சேர்த்து ஊற்றவும். அடுத்து அரைத்த தேங்காய் பேஸ்ட்டை ஊற்றி கிளறிவிட்டு அடுப்பை மிதமாக எரியவிட்டு 5 - 6 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடுங்கள்.
பிறகு மல்லித்தழை தூவி குழம்பை இறக்கிவிடவும்.
ருசியான கமகமக்கும் முருங்கை மட்டன் குழம்பு ரெடி.
சாதம் இட்லி, தோசை, ஆப்பம், பூரி, ரொட்டி என அனைத்திற்கும் ஏற்றது. நறுக்கிய முருங்கைக் காயாக போடாமால் முருங்கைக் காயை தனியே வேக வைத்து உள்ளிருக்கும் ஜெல்லியை மட்டும் வழித்து எடுத்து குழம்பில் சேர்த்தும் சமைக்கலாம் அதுவும் ருசியாகவே இருக்கும்.
நன்றி - வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம், ருசி 6.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்