Meal Maker Masala: ஹோட்டல் ஸ்டெயில் மீல் மேக்கர் மசாலா.. சப்பாத்திக்கு சரியான காமினேஷன்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க
Meal Maker Masala Curry Recipe: மீல் மேக்கரை தொடர்ந்து உட்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்கும். பெண்கள் தொடர்ந்து சோயா மீல் மேக்கரை சாப்பிட்டு வந்தால், மெனோபாஸ், பிசிஓஎஸ் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ருசியான மீல் மேக்கர் மசாலா செய்வது எப்படி என பார்க்கலாம்.
Meal Maker Masala Curry: சிக்கன் மற்றும் மட்டன் கிரேவியை விட இப்படி சமைக்கப்படும் மீல் மேக்கர் மசாலா கிரேவி சுவையாக இருக்கும்.. ஒரு முறை ட்ரை பண்ணுங்க
சோயா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மீல் மேக்கரை மிகவும் சுவையானதாக சமைக்கலாம். மீல் மேக்கர் மசாலா கிரேவியை சமைத்தவுடன், சிக்கன் குழம்பு மற்றும் மட்டன் குழம்பு டேஸ்ட் உங்களுக்கு கிடைக்கும். மீல் மேக்கரில் அதிக புரதம் இருப்பதால் அது சத்தானது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அசைவம் உணவை மிஸ் பண்ணுகிறோம் என்ற எண்ணம் வரும் நாட்களில் மீல் மேக்கர் கிரேவி மிகவும் சரியாக இருக்கும். மீல் மேக்கர் மசாலா கிரேவி ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மீல் மேக்கர் மசாலா கறி ரெசிபிக்கு தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - நூறு கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
இலவங்கப்பட்டை - ஒன்று
கொத்தமல்லி - ஒரு ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
கிராம்பு - ஐந்து
பச்சை தேங்காய் - சிறிய துண்டு
எண்ணெய் - மூன்று கரண்டி
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - சுவைக்க
தக்காளி - ஒன்று
புதினா - ஒரு ஸ்பூன்
மிளகாய் - அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிட்டிகை
பச்சை மிளகாய் - இரண்டு
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி தூள் - ஒரு ஸ்பூன்
மீல் மேக்கர் மசாலா கிரேவி செய்முறை
1. மீல் மேக்கர்களை கொதிக்கும் நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, பின் நன்றாக பிழிந்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
2. இப்போது கொத்தமல்லி, இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் மென்மையான பேஸ்ட்டில் சேர்க்கவும்.
3. அரைத்த பேஸ்ட்டை தனியாக வைக்க வேண்டும்.
4. இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். அந்த எண்ணெயில் மீல் மேக்கர்களை வறுக்கவும். பின்னர் அவற்றை வெளியே எடுத்து ஒதுக்கி வைக்கவும்.
5. அதே கடாயில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
6. மிக்ஸியில் அரைத்த மசாலா பேஸ்ட்டை வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டம்.
7. இப்போது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
8. மேலே ஒரு மூடி வைத்து வேக விடவும். இத மென்மையாக மாறும்.
9. உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, புதினா இலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
10. மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். அதனுடன் முன் வறுத்த மீல் மேக்கரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்
11. பின்னர் அதில் அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். மூடி வைத்து சமைக்கவும்.
12. பத்து நிமிடம் வேகவைத்து அதன் மேல் கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் மீல் மேக்கர் மசாலா கிரேவி தயார்.
இந்த மீல் மேக்கர் மசாலா கிரேவியை சூடான சாதத்துடன் சேர்த்து சுவைத்து மகிழுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் கூட சுவையாக இருக்கும். இந்தக் கறியை சாப்பிட்டால் சிக்கன், மட்டன் கிரேவிதான் நினைவுக்கு வரும். ப்ளைன் பிரியாணி செய்து அதனுடன் இந்தக் கிரேவியை சாப்பிட்டால் சுவை சாதாரணமாக இருக்காது. மீல் மேக்கர் மசாலா கிரேவியை ஒருமுறை சாப்பிட்டால், வாரம் ஒருமுறை நீங்களே சமைத்து சாப்பிடுவீர்கள்.
சோயா மீல் மேக்கரை தொடர்ந்து உட்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்கும். பெண்கள் தொடர்ந்து சோயா மீல் மேக்கரை சாப்பிட்டு வந்தால், மெனோபாஸ், பிசிஓஎஸ் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மீல் மேக்கர் சாப்பிடுவது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவும். வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு மீல் மேக்கர் மிகவும் உதவியாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்