Mushroom Chukka Fry : மட்டன் சுக்காவுக்கு டஃப் கொடுக்கும் மஸ்ரூம் சுக்கா; ஃபிரஷ் மசாலாவுடன் டேஸ்டில் அசத்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mushroom Chukka Fry : மட்டன் சுக்காவுக்கு டஃப் கொடுக்கும் மஸ்ரூம் சுக்கா; ஃபிரஷ் மசாலாவுடன் டேஸ்டில் அசத்தும்!

Mushroom Chukka Fry : மட்டன் சுக்காவுக்கு டஃப் கொடுக்கும் மஸ்ரூம் சுக்கா; ஃபிரஷ் மசாலாவுடன் டேஸ்டில் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Sep 29, 2024 12:57 PM IST

Mushroom Chukka Fry : மட்டன் சுக்காவுக்கு டஃப் கொடுக்கும் மஸ்ரூம் சுக்கா; ஃபிரஷ் மசாலாவுடன் டேஸ்டில் அசத்தும். இத்தனை சுவை கொண்டதா என ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

Mushroom Chukka Fry : மட்டன் சுக்காவுக்கு டஃப் கொடுக்கும் மஸ்ரூம் சுக்கா; ஃபிரஷ் மசாலாவுடன் டேஸ்டில் அசத்தும்!
Mushroom Chukka Fry : மட்டன் சுக்காவுக்கு டஃப் கொடுக்கும் மஸ்ரூம் சுக்கா; ஃபிரஷ் மசாலாவுடன் டேஸ்டில் அசத்தும்!

ஃபிரஷ் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய் – 6

பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

பட்டை – 1 இன்ச்

கிராம்பு – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

ஏலக்காய் – 1

சுக்கா செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 2

மஸ்ரூம் – 200 கிராம்

செய்முறை

முதலில் மஸ்ரூம்களை கழுவி, துடைத்து சுத்தம் செய்து இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஃபிரஷ் மசாலா அரைக்கும் முறை

மிளகு, சீரகம், வரமல்லி, சோம்பு, வரமல்லி, கஷ்மீரி மிளகாய், பச்சரிசி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, ஏலக்காய் என அனைத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

வறுக்கும்போது கவனம் தேவை. அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் வாசம் வந்தவுடன் இறக்கிவிடவேண்டும். நன்றாக ஆறிய பின்னரே அரைக்க வேண்டும். அப்போதுதான் பொடி சுவையாகவும் நன்றாகவும் இருக்கும்.

இதுவே ஃபிரஷ் மசாலாப்பொடி அரைக்கும் முறை. இந்த மசாலாவை அனைத்து வகை கறி மசாலாக்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மட்டன், சிக்கன் சுக்காவுக்கும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிகளவில் செய்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம்.

சுக்கா செய்வது எப்படி?

ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் சிறிது சோம்பு மட்டும் சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும். கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

பச்சை மிளகாயை முழுவதுமாக சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது பொடித்து வைத்து ஃபிரஷ் மசாலாவை சேர்த்து, மஸ்ரூமையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து வதக்கவேண்டும். நிறைய தண்ணீர் தெளித்துவிடக்கூடாது. மஸ்ரூமில் இருந்து ஏற்கனவே தண்ணீர் வெளியேறும். எனவே லேசாக தண்ணீர் தெளித்து மூடிவைத்து வேகவைக்கவேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும்போது மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையில் மஸ்ரூம் மட்டன் சுக்கா தயார். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.