Prawn Pepper Fry: காரசாரமான இறால் மிளகு வறுவல்! இன்றே செய்து பாருங்கள்!
Prawn Pepper Fry: அசைவ உணவுகளில் இறால் உணவுகள் மிகவும் சுவையான உணவாகும். கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு இறால் ஒரு சத்து மிக்க உணவாகவும் இருந்து வருகிறது. மற்ற அசைவ உணவுகளை போல இதனை செய்வதற்கு அதிகப்படியான மசாலா தேவையில்லை.
அனைத்து வகை கடல் உணவுகளும் மிகுந்த சுவையுடன் இருக்கும். குறிப்பாக அசைவ உணவுகளில் இறால் உணவுகள் மிகவும் சுவையான உணவாகும். கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு இறால் ஒரு சத்து மிக்க உணவாகவும் இருந்து வருகிறது. மற்ற அசைவ உணவுகளை போல இதனை செய்வதற்கு அதிகப்படியான மசாலா தேவையில்லை. உங்கள் வீட்டிலும் இந்த இறால் மிளகு வறுவலை செய்து கொடுத்து அசத்துங்கள். இதோ இந்த ஈஸியான ரெசிபி.
தேவையான பொருட்கள்
கால் கிலோ இறால்
ஒரு பெரிய வெங்காயம்
3 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
4 வற மிளகாய்
2 டீஸ்பூன் மல்லிதூள்
சிறிதளவு சீரகம்
100 கிராம் மிளகு
சிறிதளவு பட்டை
சிறிதளவு கிராம்பு
இரண்டு ஏலக்காய்
சிறிதளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், கறிவேப்பிலையை நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் மல்லித் தூள், சீரகம், மிளகை போட்டு வதக்கவும். வதக்கிய மசலாவை ஆற வைத்து அரைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிரிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பின் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கி விட வேண்டும். நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் இறாலை போட்டு அது நன்கு வெங்காயத்துடன் சேருமாறு அதை கலந்து விட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விட வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விட வேண்டும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு இறால் மிளகு வறுவலை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அசத்தலாக இருக்கும் இறால் மிளகு வறுவல் தயார். இந்த அசத்தலான இறால் மிளகு செய்து கொடுத்து உங்கள் வீடுகளில் உள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.
டாபிக்ஸ்