Mudakathan Keerai Dosai : மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் கீரை தோசை! ஊத்தப்பமும் செய்யலாம்!
Mudakathan Keerai Dosai : மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் கீரை தோசை, ஊத்தப்பமும் செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் சிறந்த உணவு.
தேவையான பொருட்கள்
இட்லி-தோசை மாவு – 2 கப்
சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை – 2 கப்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 ஸ்பூன்
செய்முறை
முடக்கத்தான் கீரை இலைகளை நன்றாக அலசி காயவைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு மிக்ஸியில் முடக்கத்தான் கீரை, சீரகம், பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். நல்ல மையாகவோ அல்லது கொஞ்சம் திப்பிதிப்பியோகவோ உங்களுக்கு பிடித்ததுபோல் அரைத்துக்கொள்ளுங்கள்.
இந்த கலவையை இட்லி மாவுடன் கலந்துகொள்ளுங்கள். மாவுக்கு தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.
தோசைக்கல்லை சூடாக்கி அதில் மாவு சேர்த்து தோசைகளாக வார்த்து எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் விரும்பினால் சிறிது வெங்காயம் வெட்டி சேர்த்து ஊத்தப்பமாகவும் செய்துகொள்ளலாம்.
உங்களுக்கு பிடித்த தேங்காய், தக்காளி, புதினா போன்ற சட்னிகள் மற்றும் சாம்பாருடன் பரிமாற சுவை அள்ளும்.
முடக்கத்தான் கீரை எலும்புகளுக்கு பலம் சேர்ப்பவை. கீரைகள் அனைத்தும் பெரும்பாலும் உடலுக்கு நலன் சேர்ப்பவைதான். அதிலும் குறிப்பாக முடக்கத்தான் கீரையில் அதிக நன்மைகள் உள்ளது.
பூஞ்சை மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராக போராடக்கூடிய திறன்பெற்றது. ஆர்த்தரிட்டிஸ் நோயின் எதிரியாகவும் உள்ளது. இது கொஞ்சம் கசப்பாக இருக்கும். அதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். எனவேதான் இதுபோல் தோசை, ஊத்தப்பம் என்று செய்துகொடுகிறோம். வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். இதை சாம்பார், கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
இந்த கீரை எலும்புக்கு வலு சேர்ப்பதுடன், மூல நோய், சரும நோய்கள், காது வலி, மாதவிடாய் பிரச்னைகள், தலைவலி, மூட்டு வலி, பொடுகுத்தொல்லை என பல்வேறு பிரச்னைகளை தீர்க்கிறது. கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது உதவுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.