தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mood Swings : மனஉளைச்சல் மற்றும் எரிச்சலா? உங்கள் உடலில் இந்த வைட்டமின் சத்துக்கள் குறைவாக உள்ளது என்று பொருள்!

Mood Swings : மனஉளைச்சல் மற்றும் எரிச்சலா? உங்கள் உடலில் இந்த வைட்டமின் சத்துக்கள் குறைவாக உள்ளது என்று பொருள்!

Priyadarshini R HT Tamil
Dec 30, 2023 02:00 PM IST

Mood Swings : உங்கள் உடலில் வைட்டமின் சத்துக்கள் குறைந்தால் மனஉளைச்சலும், எரிச்சலும் ஏற்படுகிறது.

Mood Swings : மனஉளைச்சல் மற்றும் எரிச்சலா? உங்கள் உடலில் இந்த வைட்டமின் சத்துக்கள் குறைவாக உள்ளது என்று பொருள்!
Mood Swings : மனஉளைச்சல் மற்றும் எரிச்சலா? உங்கள் உடலில் இந்த வைட்டமின் சத்துக்கள் குறைவாக உள்ளது என்று பொருள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த மனநிலை மாற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உங்கள் உணவுப்பழக்கமும் இதில் பங்கு வகிக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியை நோக்கி ஒரு படி எடுத்துவைத்தால், மகிழ்ச்சி உங்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவில் உங்களை கவனிக்க வைக்கிறது. உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் மனநலனை பாதுகாப்பதற்கு மிகவும் அவசியம். 

உங்கள் தவறான சில உணவுப்பழக்கங்கள் உங்களின் மனநலனை பாதிக்கும். உங்கள் உணவில் கீழ்க்கண்ட இந்த சத்துக்கள் குறைந்தால், அது உங்கள் மனநலனை பாதிக்கும்.

வைட்டமின் பி

நியூரோடிரான்ஸ்மிட்டர்களை உருவாக்குவதில் இந்த வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நியூரோ டிரன்ஸ்மிட்டர்கள் மூளையில் உள்ள கெமிக்கல் மெசஞ்சர்ஸ், இவைதான் உணர்வுகளை கட்டுப்படுத்துகின்றன. உங்கள் பி1, பி6 மற்றும் பி12 சத்து குறைபாடு இருந்தால், நீங்கள் மனஅழுத்தம் உள்ளவராக உணர்வீர்கள். 

எரிச்சல் அல்லது சோர்வு உங்களை வாட்டி வதைக்கும். எனவே முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், முட்டைகள் ஆகியவற்றில் அதிகளவில் வைட்டமின் பி சத்து உள்ளது. எனவே உங்கள் மனநலன் பாதிக்கப்பட்டால் இந்த உணவுகளை உடனடியாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

மெக்னீசியச்சத்துக்கள்

இந்த மெக்னீசியச்சத்துக்கள், இயற்கையாகவே உங்களை அமைதிப்படுத்தும் தன்மை கொண்டவை. உங்களின் நரம்புகளை அமைதிப்படுத்தி உங்களை ரிலாக்ஸ் செய்கிறது. உங்கள் உடலில் மெக்னீசியச்சத்துக்கள் குறையும்போது, நீங்கள் மனஅழுத்தம் நிறைந்து காணப்படுவீர்கள். 

உங்களுக்கு பயம், பதற்றம் ஏற்படும். பரங்கிக்காய் விதைகள், பாதாம், டார்க் சாக்லேட் மற்றும் பச்சை காய்கறிகள் ஆகியவற்றில் மெக்னீசியச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அது உங்கள் மனதில் ஏற்படும் மாற்றங்களை எதிர்த்து போராடுகிறது.

இரும்புச்சத்துக்கள்

நீங்கள் சோர்வுடனும், பொறுமையிழந்தும் காணப்படுகிறீர்களா? அதற்கு காரணம் இரும்புச்சத்து குறைபாடும் இருக்கலாம். இந்த முக்கியமான மினரல்தான் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டுசெல்ல உதவுகிறது. உங்கள் மூளைக்கும் சேர்த்துதான் ஆக்ஸிஜனை இரும்புச்சத்துக்க எடுத்துச்செல்கின்றன. 

உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது, உங்களின் மனநலன் பாதிக்கப்படுகிறது. இது உடல் சோர்வு, எரிச்சல் மற்றும் மனஅழுத்தத்தும் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. கீரைகள், பீன்ஸ்கள், பருப்பு வகைகள், சிவப்பு இறைச்சி வகைகள் ஆகியவை உங்கள் உடலில் இரும்புச்சத்து அளவை கட்டுப்படுத்துகின்றன.

ஒமேகா 3

இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், உங்கள் மூளையின் சூரிய உதயம் போல், உங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் வலிகளை குறைக்கின்றன. உங்களுக்கு அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றால், நீங்கள் குறைவாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இந்த ஊட்டச்சத்து சால்மன், டூனா ஆகிய மீன்களிலும், வால்நட் மற்றும் ஃப்ளாக்ஸ் விதைகளிலும் உள்ளன. இவை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைக்க உதவும்.

வைட்டமின் டி

வைட்டமின் டி உங்கள் எலும்புகளை பலப்படுத்துகின்றன. உங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில், மன அழுத்தத்தை குறைப்பதில் இந்த வைட்டமின் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் வைட்டமின் டி சத்து குறையும்போது, அது உங்களுக்கு மனஅழுத்ததையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. 

எனவே வைட்டமின் டிக்காக நீங்கள் வெயிலில் சிறிது நேரம் செலவிடுங்கள். வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த முட்டைகள், மீன்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதுடன், உங்கள் மனநிலையை சிறப்பாக்க உதவும் துணை உணவுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் மனநிலை சரியில்லை. என்றால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் உங்களை பரிசோதித்து உங்களுக்கு தேவையான சிகிச்சை அல்லது மருத்துகளை வழங்குவார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்