கீரையைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் குழந்தைகளுக்கு கீரை ஸ்டஃப்டு அப்பம் செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!
பசலைக்கீரை ஸ்டஃப்டு அப்பம் ஆரோக்கியமானது. அது மட்டுமல்ல, சீக்கிரம் செய்து விடலாம். இவற்றை ஒருமுறை ருசித்தவர், மீண்டும் மீண்டும் செய்து கொடுக்க செல்லி கேட்பார்கள். சத்தானதும் கூட.

பெரும்பாலான குழந்தைகளுக்கு கீரை என்றாலே பிடிப்பது இல்லை. கீரை உணவு சமைத்தாலோ சாப்பிட அடம்பிடிப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து போதாமை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு கீரையை ஒரே மாதிரி சமைத்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான முறையில் செய்து கொடுங்கள். இப்படி கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தான் இந்த கீரை ஸ்டஃப்டு அப்பம். பசலைக்கீரையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஸ்டஃப்டு ஆப்பம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், காலையில் குழந்தைகள் பள்ளி லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொடுக்கலாம். அல்லது மாலை டீயுடன் பரிமாறலாம். பசலைக்கீரை ஸ்டஃப்டு அப்பம் ஆரோக்கியமானது மட்டுமல்ல. சீக்கிரமே செய்து அசத்தலாம். இவற்றை ஒரு முறை ருசித்தவர், மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடும் வாய்ப்பைத் தேடுவார்கள். அப்பறம் என்ன தாமதமின்றி, சுவையான மற்றும் ஆரோக்கியமான பசலைக்கீரை ஸ்டஃப்டு அப்பத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பசலைக்கீரை ஸ்டஃப்டு அப்பம் செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் ரவை
-1/2 கப் தயிர்