Appam Recipe : சுவையான அப்பம் எப்படி செய்வது.. இந்த மாதிரி செய்து கொடுங்க.. அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!-how to make tasty and healthy recipe appam - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Appam Recipe : சுவையான அப்பம் எப்படி செய்வது.. இந்த மாதிரி செய்து கொடுங்க.. அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!

Appam Recipe : சுவையான அப்பம் எப்படி செய்வது.. இந்த மாதிரி செய்து கொடுங்க.. அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!

Divya Sekar HT Tamil
Aug 28, 2024 09:14 AM IST

Appam : சுவையான அப்பம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது

Appam Recipe : சுவையான அப்பம் எப்படி செய்வது.. இந்த மாதிரி செய்து கொடுங்க.. அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!
Appam Recipe : சுவையான அப்பம் எப்படி செய்வது.. இந்த மாதிரி செய்து கொடுங்க.. அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!

வெல்லம் சிரப் 3/4 கப்

பழுத்த வாழைப்பழம் 1

ரவா /சூஜி 1 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு சிட்டிகை

எள் விதைகள் கருப்பு 1 டீஸ்பூன்

நெய் 5 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் 5 டீஸ்பூன்

தேங்காய் பொடியாக நறுக்கியது

செய்முறை

சுவையான அப்பம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை 3 மணி நேரம் நன்கு ஊற வையுங்கள்.

பின்னர் அந்த அரிசியை நன்கு கழுவி தண்ணீர் எல்லாம் ஊற்றி விட்டு வெறும் அரிசியை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் வாழைப்பழம் சேர்த்து பின்னர் வெல்லம் பாகு தேவைக்கேற்ப சேர்த்து, ரவை ஒரு டீஸ்பூன் சேர்த்து ஒரு சிட்டிகை ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.

நைசாக அரைக்க வேண்டும்

மிகவும் நைசாக அரைக்க வேண்டும் என்று இல்லாமல் சிறிது கொரகொரப்பாக அரைத்தால் நல்லது. இப்பொழுது இந்த அரைத்த மாவை மூன்று மணி நேரம் வைத்து புளிக்க விடலாம். மாவை புளிக்க வைக்க நேரம் இல்லை என்றால் குக்கிங் சோடா சேர்த்து உடனே ஊற்றிக் கொள்ளலாம்.

இப்போது ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டிய தேங்காயை நெய்யில் போட்டு வறுக்கவும். பின்னர் கருப்பு எள் சேர்த்து வறுத்து வைத்த தேங்காயும் மாவில் சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள்.

சுவையான அப்பம் ரெடி

இப்போது பணியார கல் வைத்து நாம் தயார் செய்து வைத்த மாவை ஊற்றுங்கள். மிதமான சூட்டில் திருப்பித் திருப்பி அப்பத்தை வேகவைத்து எடுங்கள். இப்போது சுவையான அப்பம் ரெடி. இந்த மாதிரி வீட்டில் அப்பம் செய்ததில்லை என்றால் இனி செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வெல்லம் நன்மைகள்

வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.

வெல்லம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையை தவிர்க்கலாம். வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதே நேரத்தில், உடலில் உள்ள இரத்த சோகை குறைபாட்டை இரும்புச்சத்து உட்கொள்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம். 

உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தவிர்க்கலாம்

வெல்லத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம், உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தவிர்க்கலாம்.

வெல்லம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சருமத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், வெல்லத்தில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் தன்மை சருமத்தில் உள்ள மாசுக்களை அகற்றுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் வைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.