Liver Detox : உங்கள் உடலில் கல்லீரல் பிரச்னைகள் ஏற்பட்டாமல் தடுக்க இந்த ஒரு பானம் மட்டும் போதும்!
Liver Detox : உங்கள் உடலில் கல்லீரல் பிரச்னைகள் ஏற்பட்டாமல் தடுக்க இந்த ஒரு பானம் மட்டும் போதும். இதை எப்படி தயாரிப்பது என்று பாருங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
நமது உடலில் கல்லீரலால்தான பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே கல்லீரல் பிரச்னைகளை குணப்படுத்துவது அவசியம். அதற்கு கல்லீரலை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு உதவக்கூடிய கல்லீரலை சுத்தப்படுத்தும் பானம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இதை நீங்கள் கொய்யாவின் கடினமான காய்களை பயன்படுத்தி செய்யவேண்டும். இது மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
கொய்யாக்காய் – 2
சீரகம் – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
இந்துப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
கொய்யாக்காயை வெட்டி, இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் சீரகத்தை போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவேண்டும். அந்தக்காய் நன்றாக வெந்திருக்கவேண்டும். கொய்யாக்காய் இனிப்பும், துவர்ப்புமான சுவை கொண்டதாக இருக்கும். இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத்தரும்.
இது கல்லீரல் பிரச்னைகளையும் குணப்படுத்த உதவும். சர்க்கரை நோயை அடித்து விரட்டவும் செய்யும். எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற பானம். கொய்யாக்காயை நறுக்குவது கடினமாக இருக்கும். கத்தியில் சிரமப்பட்டுத்தான் நறுக்கவேண்டும். நறுக்கும்போது கவனம் தேவை.
இந்த பானத்தை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து பருகவேண்டும். ஒரு வாரம் தினமும் காலையல் வெறும் வயிற்றில் பருகிவந்தால் உங்களின் கல்லீரல் சுத்தமாகும். அதே நேரத்தில் சர்க்கரையும் கட்டுக்குள் வைக்கப்படும். அந்த வடிகட்டியதில் உள்ள வெந்த காயையும் சாப்பிடலாம். கொய்யாவை காய்ப்பருவத்தில் கடித்து சாப்பிடடுவது மிகவும் சிரமம். எனவே நீங்கள் இதுபோல் வேக வைத்து சாப்பிடுவதால் அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும தருகிறது.
உங்கள் ஹெச்.டி. தமிழ் அன்றாடம் இதுபோன்ற எண்ணற்ற தகவல்களை தொகுத்து உங்களுக்கு வழங்கி வருகிறது. ஆரோக்கிய குறிப்புகள், வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், அழகு குறிப்புகள் என் பல்வேறு விஷயங்களை கொடுத்து வருகிறது. எனவே மேலும் இதுபோன்ற தேவையான தகவல்களைப் பெறுவதற்கு எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்