Ginger: சாப்பிட்டதும் வயிறு உப்புசம் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதியா.. இந்த பக்குவத்தில் லேகியம் சாப்பிட்டு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ginger: சாப்பிட்டதும் வயிறு உப்புசம் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதியா.. இந்த பக்குவத்தில் லேகியம் சாப்பிட்டு பாருங்க!

Ginger: சாப்பிட்டதும் வயிறு உப்புசம் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதியா.. இந்த பக்குவத்தில் லேகியம் சாப்பிட்டு பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 03, 2024 06:40 AM IST

Inji Legiyam : இன்றைய அவசர உலகில் தூக்கமின்மை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, துரித உணவுகளை எடுத்துக்கொள்வது போன்ற பல பழக்கங்களால் பலரும் செரிமான கோளாறுகளை அனுபவிக்கின்றனர். அவர்கள் இந்த இஞ்சி லேகியத்தை எடுத்துகொள்ளலாம்.

Ginger: சாப்பிட்டதும் வயிறு உப்புசம் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதியா.. இந்த பக்குவத்தில் லேகியம் சாப்பிட்டு பாருங்க!
Ginger: சாப்பிட்டதும் வயிறு உப்புசம் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதியா.. இந்த பக்குவத்தில் லேகியம் சாப்பிட்டு பாருங்க!

இஞ்சி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்

இஞ்சி - 100 கிராம்

தனியா -1 கப்

வெல்லம் -1 கப்

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - கால் கப்

மிளகு -2 டீ ஸ்பூன்

ஓமம் -2 டீ ஸ்பூன்

எலுமிச்சை 2

இஞ்சி லேகியம் செய்முறை

இஞ்சியை தோல் சீவி பொடிபொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அரைத்த இஞ்சியை வடிகட்டி சாறு எடுத்து கொள்ள வேண்டும்.

சூடான கடாயில் மல்லி விதையை சேர்த்து வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். மல்லி பாதி வறுந்த பிறகு அதில் அரை கப் சீரகத்தை சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக மிளகு மற்றும் ஓமத்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த பொருட்கள் வாசம் வர ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும். நன்றாக ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து சலித்து கொள்ள வேண்டும்.

ஒரு அடி கனமான கடாயில் அரைக்கப் துருவிய வெல்லத்தை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும். வெல்லம் ஒரு கம்பி பதம் வரும் போது நாம் ஏற்கனவே அரைத்து வடிகட்டி எடுத்து வைத்த இஞ்சி சாறை சேர்த்து கிளற வேண்டும். இஞ்சி சாறு கொதிக்க ஆரம்பிக்கும் போது வறுத்து அரைத்து சலித்த பொடியை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கிளற வேண்டும். கைவிடாமல் கிளறுவது முக்கியம் இல்லை என்றால் கெட்டி பட்டு விடும். லேகியம். லேகியம் கெட்டியாக ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம். பின்னர் அதில் 2 லெமன் சாறை சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

நன்றாக ஆற விட வேண்டும். லேகியம் நன்றாக ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் எடுத்து மூடி வைக்க வேண்டும். இந்த லேகியத்தை அவ்வப்போது தேவையான அளவு ஈரம் இல்லாத ஸ்பூனை பயன்படுத்தி எடுக்க வேண்டும். ஒரு மாதம் ஆனாலும் கெட்டு போகாது. தேவைஎன்றால் ஃபிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.

முடிந்த வரை வெறும் வயிற்றில் காலை ஒரு உருண்டை சாப்பிட்டு வெது வெதுப்பான தண்ணீர் குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் வயிற்று பிரச்சனைகள் தீரும். இந்த லேகியத்தில் தேவையென்றால் கொஞ்சமாக தேன் சேர்த்து கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.