Top 8 Benefits of Alum : சருமத்தை பளபளப்பாக்கும் படிகாரம்; தண்ணீரை சுத்தமாக்குவது என எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது!
Top 8 Benefits of Alum : சருமத்தை பளபளப்பாக்கும் படிகாரம், தண்ணீரை சுத்தமாக்குவது என எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது. இதில் உள்ள நற்குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
படிகாரத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதுகுறித்து தெரிந்துகொண்டால், இதை பயன்படுத்துவதை வழக்கமாகக்கொள்வீர்கள். படிகாரத்தில் உள்ள நன்மைகளைப் பாருங்கள். ஆலம் அல்லது பிட்காரி என்று அழைப்படுகிறது. இந்த படிகாரம் இயற்கையில் உருவாகும் ஒரு கல் ஆகும். கற்கண்டு போல் தோற்றம் கொண்டது. இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. மேலும் பலவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரிய மருத்துவ முறையில் சரும பளபளப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. படிகாரம் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாக்டீரியல் குணங்கள் கொண்டது. இதை நீங்கள் உங்கள் அன்றாட பயன்பாட்டில் சேர்த்துக்கொண்டால் அது உங்களுக்கு பல வழிகளில் உதவும். அவை என்னவென்று தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள். இதுபோன்ற எண்ணற்ற குறிப்புகளை ஹெச்.டி தமிழ் உங்களுக்கு வழங்கி வருகிறது. அதை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள். படிகாரத்தின் அன்றாட பயன்பாடு மற்றும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
சருமத்தில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கிறது
படிகாரத்தில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள், சரும நோய்களுக்கு தீர்வளிக்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. சருமத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் படிகாரத்தை கரைத்து தடவினால் அந்த இடத்தில் அது குணமளிக்கிறது.
துர்நாற்றம் நீக்கும் இயற்கை பொருள்
படிகாரம், சில உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் வியர்வை நுண்ணுயிர்களைப் போக்கும் இயற்கை நிவாரணியாகும். இது உடலின் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. துவாரங்களை அடைக்கிறது. வியர்வையைக் குறைக்கிறது. வேதிக்பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில் சிறந்த இயற்கை தீர்வாக படிகாரம் உள்ளது.
ஷேவிங்
ஆண்கள் தங்கள் முகத்தை ஷேவ் செய்த பின்னர், படிகாரத்தை பயன்படுத்தி, சருமத்தை குளுமையாக்கி, தொற்றுக்களை அடித்து விரட்டலாம். ஷேவ் செய்த பின்னர் ஏற்படும் காயங்களை குணப்படுத்த படிகாரம் உதவுகிறது. நீங்கள் ஷேவ் செய்ய பயன்படுத்தும் ரேசர்கள், ஏற்படுத்தும் எரிச்சலைப்போக்க உதவுகிறது. சருமத்தை மிருவாக்குகிறது.
வாய்ப்புண்ணை ஆற்றுகிறது
வாயில் ஏற்படும் அல்சர் மற்றும் வாயில் ஏற்படும் புண்ணை ஆற்றுகிறது. இவையிரண்டையும் படிகாரத்தை வைத்து குணப்படுத்த முடியும். படகாரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மவுத் வாஷ்கள், வாயில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்துகிறது. வாயில் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது. காயங்களை காயச்செய்கிறது.
தண்ணீரை சுத்தமாக்குகிறது
படிகாரத்தைப் பயன்படுத்தி தண்ணீரை சுத்தம் செய்வது நமது பாரம்பரிய முறைகளுள் ஒன்று. மாசு கலந்த தண்ணீரில் உள்ள மாசுக்களை இது அகற்றுகிறது. இதனால் உங்களுக்கு தண்ணீரை வடிகட்டுவது அல்லது சுத்தம் செய்வது எளிது. சுத்தமான தண்ணீர் கிடைக்கப்பெறாத இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி சுத்தம் செய்து, தூய, பருகுமளவுக்கு ஏற்ற தண்ணீரை வழங்கலாம்.
ஈறுகளை இறுக்கமாக்குகிறது
படகாரத்தைப் பயன்படுத்தி பற்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். இது சருடத்தை இறுக்கமாக்கும் தன்மை கொண்டது அனைவரும் அறிந்தது. அதேபோல், படிகாரம் மற்றும் கிராம்பை பொடியாக்கி வீட்டில் தயாரிக்கும் டூத் பேஸ்டாகப் பயன்படுத்தலாம். இது ஈறுகளை இறுக்கமாக்கி, பற்களை பாதுகாக்கிறது. பற்களுக்கு நல்ல தோற்றத்தை தருகிறது.
முகப்பருக்களை குணப்படுத்துகிறது
படிகாரத்தில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ஆகியவற்றுக்கு படிகாரம் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கிறது. முகப்பருக்கள் உள்ள இடத்தில் சிறிது படிகாரத்தை பூசினால் அது பருக்களை அடித்து விரட்டுகிறது. பாக்டீரியாக்களைப் போக்குகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது.
பாத வெடிப்புக்கு சிகிச்சையளிக்கிறது
படிகாரத்தை பயன்படுத்தி பாதவெடிப்பை போக்க முடியும். படிகாரத்தை சேர்த்த தண்ணீரில் பாதத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். இது பாதத்தில் உள்ள பூஞ்ஜைகள் மற்றும் கிருமிகளைப் போக்குகிறது. இது உடலில் ஏற்படும் நாற்றத்தைப் போக்க உதவுகிறது. பாதத்தில் உள்ள வெடிப்பை போக்குகிறது. வறட்சியைப் போக்கி, பாதத்தை மிருதுவாக்குகிறது.
தொடர்புடையை செய்திகள்