Liver Health : உங்கள் கல்லீரலின் ஆரோக்கியம் குறைகிறதா? இந்த அறிகுறிகள் தோன்றினால் எச்சரிக்கை!-liver health is your liver health declining warning if these symptoms appear - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Health : உங்கள் கல்லீரலின் ஆரோக்கியம் குறைகிறதா? இந்த அறிகுறிகள் தோன்றினால் எச்சரிக்கை!

Liver Health : உங்கள் கல்லீரலின் ஆரோக்கியம் குறைகிறதா? இந்த அறிகுறிகள் தோன்றினால் எச்சரிக்கை!

Priyadarshini R HT Tamil
Apr 21, 2024 01:46 PM IST

Liver Health : உங்கள் கல்லீரலில் இந்த அறிகுறிகள் தோன்றினால் அது ஆபத்தில் உள்ளது என்று பொருள். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

Liver Health : உங்கள் கல்லீரலின் ஆரோக்கியம் குறைகிறதா? இந்த அறிகுறிகள் தோன்றினால் எச்சரிக்கை!
Liver Health : உங்கள் கல்லீரலின் ஆரோக்கியம் குறைகிறதா? இந்த அறிகுறிகள் தோன்றினால் எச்சரிக்கை!

உங்கள் உடலில் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றினால், அது உங்கள் உடலில் கல்லீரல் நன்றாக செயல்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

சோர்வு

தொடர் சோர்வு கல்லீரலில் சேதத்தை ஏற்படுத்துகிறது. ஆற்றல் வளர்சிதையில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு கடும் சோர்வு ஏற்பட்டால், எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் சோர்வு துரத்தினால் உங்கள் கல்லீரலை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று பொருள்.

வயிற்றுப் பகுதியில் தசை

வயிற்றுப் பகுதியை சுற்றி கொழுப்பு படர்ந்தால், உங்களின் கல்லீரல் சேதமடைந்துள்ளது என்று அர்த்தம். இந்த கொழுப்பு சேர்க்கை, விஸ்சிரால் கொழுப்பு ஃபேட்டி லிவர் போன்ற பிரச்னைகளுடன் தொடர்புகொண்டது. இது கல்லீரலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்.

மஞ்சள் காமாலை

உங்கள் கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் மாறினால், அது மஞ்சள் காமாலை என்று அர்த்தம். இது கல்லீரல் பாதிக்கப்பட்டால் ஏற்படும் ஒரு பொதுவான கோளாறு ஆகும். இது உங்கள் உடலில் பில்ருபினை முறையான உடல் சரிசெய்ய முடியாவிட்டால் ஏற்படுகிறது. இதனால் உடலில் அதிகளவில் பில்ருபினை சேகரித்து, உங்கள் உடலுக்கு மருத்துவ தேவை என்பதை காட்டுகிறது.

வயிற்று வலி

மேல்வயிற்றில் வலது பகுதியில் வலி ஏற்பட்டால், அது கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பை காட்டுகிறது. ஏனெனில் அங்கு தான் கல்லீரல் உள்ளது. இது சாதாரண வலி முதல் கடும் வலி வரை இருக்கும். எனவே இதுபோன்ற வலி ஏற்பட்டால் உடனே இதுகுறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வீக்கம்

வயிறு, கால், கணுக்கால் ஆகிய இடங்களில் வீக்கம் ஏற்பட்டால் அது உங்கள் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை காட்டுகிறது. இந்த இடங்களில் வீக்கம் ஏற்பட்டாலோ அதனுடன் வேறு பிரச்னைகளும் சேர்ந்திருந்தாலோ அது உங்கள் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்னைகளை காட்டுகிறது.

சிறுநீர் மற்றும் மலத்தின் நிறத்தில் மாற்றம்

சிறுநீர் கடும் மஞ்சள் நிறத்தில் வெளியேறினாலோ அல்லது மலம் மண் நிறத்தில் இருந்தாலோ உங்கள் கல்லீரலில் கட்டாயம் பிரச்னைகள் உள்ளது என்பதற்கான அறிகுறிகள் இவை. சிறுநீர் நிறமாற்றத்துக்கு காரணம் அதில் உள்ள பில்ருபினின் அளவு ஆகும். கல்லீரலால் பித்தத்தை சரியாக வெளியிட முடியவில்லையென்றால், மலம் நிறம் மாறிவிடும். இந்த மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

சருமத்தில் எரிச்சல்

உங்கள் சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால், அதுவும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிதான். இது உங்கள் பித்தத்தில் உப்பு கலந்தால் ஏற்படும். அது ரத்த்தில் கலந்து உங்கள் சருடமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. உங்கள் உடலில் சொல்ல முடியாத எரிச்சல் ஏற்பட்டால், அது உங்கள் கை – கால்களில் குறிப்பாக தோன்றினால், நீங்கள் சுகாதார அலுவலரை அணுகுவது சிறந்தது.

சிராய்ப்புகள் மற்றும் ரத்தம் வழிதல்

உங்கள் கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், அது உங்கள் உடலில் ரத்தம் உறைதல் பிரச்னைகளை அதிகரிக்கும். இதனால் சிராய்ப்புகள் மற்றும் நீண்ட நேரம் ரத்தம் வழிதல் ஆகியவை ஏற்படும். சிறிய காயங்கள் ஏற்பட்டால் கூட, ரத்தம் வழிவது நிற்பதில்லை. உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டாலோ அல்லது மூக்கில் ரத்தம் வழிந்தாலோ அது உங்கள் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். இது கல்லீரல் தொடர்பான பிரச்னைகளால் ஏற்படுகிறது.

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல்

உங்கள் கல்லீரலில் சேதம் ஏற்பட்டாலும் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனுடன், மஞ்சள் காமாலை, வயிற்று வலி, வீக்கம் ஆகியவை இருந்தால் உங்கள் கல்லீரலில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது என்று பொருள். கல்லீரல் இயங்காமல் இருப்பது உங்கள் செரிமானத்தை தடுக்கும், இது ஆசிட் வெளியேறுவதற்கும், வயிற்றில் வாயுத்தொல்லைக்கும் வழிவகுக்கும். எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை கொடுக்கவேண்டும்.

மற்ற அறிகுறிகள்

கல்லீரல் நோயில் தெரியக்கூடிய மற்ற அறிகுறிகள், ரத்த செல்கள் எட்டுக்கால் பூச்சி போன்ற தோற்றத்திற்கு மாறுவது, இது தெரியாமல் இருக்கும் கல்லீரல் பிரச்னையின் அறிகுறியாகும். இது பெரிதாவதற்குள் நீங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.