World Liver Day 2024 : 2030ம் ஆண்டில் கல்லீரல் கோளாறுகள் 35 சதவீதம் அதிகரிக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Liver Day 2024 : 2030ம் ஆண்டில் கல்லீரல் கோளாறுகள் 35 சதவீதம் அதிகரிக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

World Liver Day 2024 : 2030ம் ஆண்டில் கல்லீரல் கோளாறுகள் 35 சதவீதம் அதிகரிக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Priyadarshini R HT Tamil
Apr 19, 2024 06:00 AM IST

World Liver Day 2024 : உலக கல்லீரல் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்ன தெரியுமா?

World Liver Day 2024 : 2030ம் ஆண்டில் கல்லீரல் கோளாறுகள் 35 சதவீதம் அதிகரிக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
World Liver Day 2024 : 2030ம் ஆண்டில் கல்லீரல் கோளாறுகள் 35 சதவீதம் அதிகரிக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்று கல்லீரல். வயிற்றின் வலது புறத்தில் அமைந்துள்ள உறுப்பு. நாம் சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு கல்லீரல் உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது.

உடலின் முக்கிய பாகங்களாக கருதப்படும் மூளை, இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு கல்லீரல். ரத்தம் அடைக்கும் பிரச்னைகளை தீர்க்கிறது. உடல் முழுவதும் ரத்தத்தை அனுப்புகிறது. ஒவ்வொரு ஆண்டும் கல்லீரல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

கல்லீரலின் முக்கியத்துவம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மறறும் நாம் நமது கல்லீரல் நன்றாக இயங்குகிறதா, ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்வதையும் இந்த நாள் வலியுறுத்துகிறது. இந்த சிறப்பான நாளை நாம் சிறப்பாக கொண்டாடுவதற்காக, சில விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

கல்லீரல் தினம்

ஒவ்வொரு ஆண்டும், உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு அந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

வரலாறு

2010ம் ஆண்டு கல்லீரலை ஜரோப்பிய சங்கம், உலகின் முதல் உலக கல்லீரல் தினத்தை உருவாக்கியது. அந்த மையம் 1966ம் ஆண்டு நிறுவப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அது முதல் உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆய்வுகளைப் பொறுத்தவரையில், 20 லட்சம் பேர், கல்லீரல் நோய்களால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பலியாகிறார்கள். 2030ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்லீரல் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உலக சுகாதார நிறுவனம் நமக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முக்கியத்துவம்

உலக கல்லீரல் தினத்தின் இந்தாண்டின் கருப்பொருள் விழிப்புணர்வுடன் இருந்து, வழக்கமான கல்லீரல் பரிசோதனையை செய்துகொண்டு, ஃபேட்டி கல்லீரல் பிரச்னைகளை தடுக்கவேண்டும் என்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் கல்லீரல் பிரச்னைகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை, அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தெரியாமை உள்ளது.

எனவே இந்த நாள், மக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ மக்களை வலியுறுத்துகிறது. கல்லீரல் நோய்கள் வராமல் தடுக்க தேவையான உணவுப்பழக்கங்களை நாம் மேற்கொள்ள வலியுறுத்துகிறது.

மேலும் போதிய அளவு உறக்கம், மனஅழுத்தத்தை குறைக்கும் பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது, ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பழகிக்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் மதுவை தவிர்ப்பது மற்றும் புகையிலையை கைவிடுவது ஆகியவை, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் ஆகும்.

எனவே சத்தான ஆகாரங்களை மட்டுமே உட்கொண்டு, குப்பை உணவுகளை தவிர்த்து, போதிய உடற்பயிற்சி, உறக்கம் என உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழக்கவழக்கங்களை கடைபிடித்து கல்லீரல் கோளாறுகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுகுறித்து உலக கல்லீரல் தினத்தில் உறுதிகொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.