Black Ginger Tea: கொலஸ்ட்ராலை கரைக்க தினமும் இந்த ஒரு டீயை குடித்தால் போதுமே! கல்லீரல் செயல்பட்டையும் துரிதப்படுத்தும்!
Black Ginger Tea Benefits: தினமும் கருப்பு இஞ்சி டீ (Black Ginger Tea) குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கலாம். இதன் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது.

Black Ginger Tea Benefits: இப்போது வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு இதய நோய் ஏற்படுகிறது. யாருக்கு எப்போது மாரடைப்பு வரும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக கொலஸ்ட்ரால் இதய நோய்க்கு முக்கிய காரணம். இன்றைய வாழ்க்கை முறை பலரூக்கும் கொலஸ்ட்ரால் வருவதற்கு காரணம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொலஸ்ட்ராலைக் கரைத்தால் அவை இதயத்தைப் பாதுகாக்கும். உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ராலை கரைக்க தினமும் கருப்பு இஞ்சி டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது ஒரு சிறந்த உணவு. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
தினமும் கருப்பு இஞ்சி டீ (Black Ginger Tea) குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கலாம். இதன் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது. இது நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கிறது.
கருப்பு இஞ்சி டீ குடிப்பது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆனால் இந்த கருப்பு இஞ்சி டீயை காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். அப்போதுதான் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். உங்கள் கல்லீரல் கொலஸ்ட்ரால் மற்றும் பிற கொழுப்புகளை இரத்த ஓட்டத்தில் கொண்டு செல்லும் லிப்போபுரோட்டீன்களை உருவாக்குகிறது. எனவே கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் கல்லீரல் செயல்பாடு மிகவும் முக்கியமானது.
