கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு; காலையிலே செஞ்சுட்டு ரெஸ்ட் எடுங்க! மூன்று வேளைக்கும் வெச்சுக்கலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு; காலையிலே செஞ்சுட்டு ரெஸ்ட் எடுங்க! மூன்று வேளைக்கும் வெச்சுக்கலாம்!

கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு; காலையிலே செஞ்சுட்டு ரெஸ்ட் எடுங்க! மூன்று வேளைக்கும் வெச்சுக்கலாம்!

Priyadarshini R HT Tamil
Nov 08, 2024 01:35 PM IST

கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு, காலையிலே செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுக்கலாம். ஏனென்றால் மூன்று வேளைக்கும் வரும். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு; காலையிலே செஞ்சுட்டு ரெஸ்ட் எடுங்க! மூன்று வேளைக்கும் வெச்சுக்கலாம்!
கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு; காலையிலே செஞ்சுட்டு ரெஸ்ட் எடுங்க! மூன்று வேளைக்கும் வெச்சுக்கலாம்!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

மிளகு – ஒரு ஸ்பூன்

கிராம்பு – 4

இஞ்சி – ஒரு இன்ச்

பூண்டு – 4 பல்

வர மிளகாய் – 3

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு

பழுத்த தக்காளி – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

மல்லித்தழை – சிறிதளவு

வெந்தயம் – 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடலை பருப்பு சேர்த்து அது நன்றாக பொரிந்து வந்தவுடன், சோம்பு சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து பட்டை, கிராம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வர மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக குலைய வதங்கவிடவேண்டும். தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கி, மல்லித்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து அரைத்த விழுதை சேர்த்து, மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவேண்டும்.

தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து, மல்லித்தழை தூவி பரிமாறினால் சூப்பர் சுவையான கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு தயார். இதை காலையில் இட்லிக்கு ஊற்றிக்கொள்ளலாம். மதியம் சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இரவு சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.