தளதளன்னு மல்லித்தழை – தக்காளி கடையல்; இட்லி மேல் ஊற்றினால் எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தளதளன்னு மல்லித்தழை – தக்காளி கடையல்; இட்லி மேல் ஊற்றினால் எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்!

தளதளன்னு மல்லித்தழை – தக்காளி கடையல்; இட்லி மேல் ஊற்றினால் எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்!

Priyadarshini R HT Tamil
Oct 15, 2024 02:35 PM IST

தளதளன்னு மல்லித்தழை – தக்காளி கடையலை ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். இட்லி மேல் ஊற்றினால் எத்தனை இட்லிகள் வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

தளதளன்னு மல்லித்தழை – தக்காளி கடையல்; இட்லி மேல் ஊற்றினால் எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்!
தளதளன்னு மல்லித்தழை – தக்காளி கடையல்; இட்லி மேல் ஊற்றினால் எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்!

இதயத்துக்கு நண்பனாக திகழும் கொத்தமல்லி இலை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்புக்கான அபாயம் குறைவாக உள்ளது. கொத்தமல்லி இலையில் டெர்பினீன், க்வெர்செடின் மற்றும் டோகோபெரோல்ஸ் உள்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இவை செல்களின் பாதிப்பு ஏற்படாமல் போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இவை வீக்கத்தை குறைத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, ஈ காரோடெனாய்ட்ஸ் போன்றவை இருப்பதால் உங்கள் பார்வையை கூர்மையாக்குகிறது. வயது முதிர்வின்போது பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் மாகுலர் நோய் சிதைவு ஏற்படுத்துவதை தாமதப்படுத்துகிறது. கொத்தமல்லியில் கால்சீயம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதுடன், மூட்டு வலிகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த மல்லித்தழையை வைத்து தக்காளியுடன் ஒரு தொக்கு செய்து பாருங்கள் சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். இதன் சுவையால் நீங்கள் தொட்டு சாப்பிட மாட்டீர்கள். இட்லியில் பிசைந்து சாப்பிடுவீர்கள்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 20 பல்

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 1 (முழுதாக சேர்த்துக்கொள்ளவேண்டும்)

கறிவேப்பிலை – ஓரு கொத்து

மல்லித்தழை – ஒரு கொத்து

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம், மல்லித்தழை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். அதை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், உளுந்து சேர்த்து தாளிக்கவேண்டும். அனைத்தும் பொரிந்தவுடன் கறிவேப்பிலை, முழு வர மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவேண்டும். மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையில் மல்லித்தழை – தக்காளி கடையல் தயார். இதை இட்லியில் ஊற்றி பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை தோசை, உப்புமா, ஆப்பம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.