தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kissing : மனைவிக்கு தினமும் முத்தமிடுவதில்லையா? போச்சு, எத்தனை சிக்கலை ஏற்படுத்துகிறது பாருங்கள்!

Kissing : மனைவிக்கு தினமும் முத்தமிடுவதில்லையா? போச்சு, எத்தனை சிக்கலை ஏற்படுத்துகிறது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 01, 2023 12:15 PM IST

What Will happen When Miss to Kiss : காதல் உறவு, திருமண பந்தம் இரண்டுடிலும் முத்தம்தான் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது ஒரு சாதாரண விஷயம்தான் ஆனால் அதன் பலன் அதிகம். குறிப்பாக கணவன்-மனைவி இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்தத ஒன்றாக கருதப்படுகிறது.

Kissing : மனைவிக்கு தினமும் முத்தமிடுவதில்லையா? போச்சு, எத்தனை சிக்கலை ஏற்படுத்துகிறது பாருங்கள்!
Kissing : மனைவிக்கு தினமும் முத்தமிடுவதில்லையா? போச்சு, எத்தனை சிக்கலை ஏற்படுத்துகிறது பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

உணர்வு ரீதியிலான தூரம் அதிகரிக்கும்

ஒரு சாதாரண முத்தம்தான், ஆனால் இது இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையில் நெருக்கம் குறைந்து தம்பதிகளிடையே தூரம் அதிகரித்துவிடும். முத்தமிடுவது ஒரு உடல் ரீதியான செயல் மட்டும் கிடையாது. அன்பின் வெளிப்பாடு என்பதால், உணர்வுடனும் கலந்துள்ளது. காதல், பாசம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு எல்லாமே முத்தம்தான் வெளிப்படுத்துகிறது. முத்தமிடுவது தம்பதிகளிடையே நின்றுவிட்டால், அவர்களுக்குள் உணர்வு ரீதியிலான நெருக்கம் குறைந்துவருகிறது என்று பொருள். அன்பின் வெளிப்பாடான உடல் ரீதியான இந்த முத்தமிடுதல் இல்லையென்றால் அவர்கள் விலகுகிறார்கள் என்று பொருள். தனிமை, உரையாடல் நிற்பது, சண்டைகள் ஏற்படுவதற்கான பாதை ஆரம்பிக்கிறது என்று பொருள்.

முத்தமிடும்போது ஆக்ஸிடோசின் என்ற காதல் ஹார்மோன் சுரக்கிறது. இதனால் தம்பதிகளிடையே இணக்கம் உருவாகிறது. அவர்களை நெருக்கமாகவும், சேர்ந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

நெருக்கம் குறைகிறது

காதலில் முத்தமிடுவதுதான் உடல் ரீதியான நெருக்கத்திற்கான பாதை. இது இன்னும் நெருக்கம் அதிகரிக்கவும், உடலுறவு வைத்துக்கொள்வதற்கு தூண்டுதலாகவும் உள்ளது. திருமணமான தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்திவிட்டால், உடல் ரீதியான ஒட்டுமொத்த நெருக்கமும் குறைந்துவிடும். முத்தமிடுவது குறைந்தால் கட்டி அணைத்துக்கொள்வது குறைந்து கடைசியில் உடலுறவு நடவடிக்கைகளே இல்லாமல் போகிறது. இந்த உடல் ரீதியிலான நெருக்கம் குறைவது, உறவிலே பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

உடல் நெருக்கம் உடல் தேவைகளை மற்றும் பூர்த்தி செய்வதில்லை. அது பாதுகாப்பு, உறவில் மன திருப்தி ஆகிய அனைத்தையும் கொடுக்கிறது. எனவே முத்தமிடுவதை மறக்கும்போது தம்பதி அதை தொடர்ந்து ஏற்படும் நெருக்கத்தையும், ஆழ்ந்த உணர்வுகளையும் இழக்கிறார்கள்.

உரையாடல் குறைவது

முத்தமிடுவது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல அது நல்ல உரையாடலுக்கான துவக்கமும் ஆகும். அதனால்தான் உறவில் முத்தம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அது உணர்வுகள், ஆசைகள், தேவைகள் என அனைத்தையும் கூறுகிறது. தம்பதிகள் முத்தமிட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டால், அவர்களால் நல்ல உரையாடலில் ஈடுபட முடியாது. வாய் வழியாக பேசிக்கொள்வது முக்கியம் ஆனால் அதற்கு முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது போன்ற அன்பின் மொழிகள் தேவைப்படுகின்றன.

உடல் ரீதியான தூரம், உரையாடலையும் தம்பதிகள் மத்தியில் குறைக்கிறது. இதனால் புரிதல் குறைந்து சண்டை மற்றும் வாக்குவாதங்கள் அதிகரிக்கிறது. இதனால், சண்டைகளை ஆரோக்கியமான முறையில் தீர்த்துக்கொள்ளக்கூட முடிவதில்லை.

சுயமரியாதை குறையும்

உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் மொழி மட்டுமல்ல முத்தம், அது சுயமரியாதை தொடர்புடையது. தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தினால், அவர்களின் சுயமரியாதை, சுய மதிப்பு ஆகியவை பாதிக்கப்படுமாம். முத்தம் ஒரு வகையான காதலை, ஆசையை கொடுக்கிறதாம். ஈர்ப்பை அதிகரிக்கிறதாம். 

அது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறதாம். வழக்கமான முத்தம் கொடுக்காவிட்டால், தம்பதிகள் தாங்களிடம் ஈர்ப்பு இல்லை, ஆசை இல்லை என்று கருதிக்கொள்கிறார்களாம். இதனால் அதிருப்தி மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்பட்டு, தம்பதிகளிடையே உணர்வு ரீதியிலான உறவை அது பாதிக்கிறதாம்.

துரோகம் அதிகரிக்கும்

தம்பதிகள் முத்தத்தை நிறுத்திவிட்டால் துரோம் செய்யும் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாம். ஆனால் எல்லா துரோகத்துக்கும் உடல் ரீதியான நெருக்கம் குறைவது காரணமல்ல, ஆனால் அது ஒரு காரணமாக கருதப்படுகிறது. திருப்தியின்றி, உணர்வு ரீதியாக விலகியிருப்பதுபோல் தம்பதிகள் உணர்ந்தால், உடல் ரீதியிலான நெருக்கம் குறையும்போது தம்பதிகள் அதை வெளியே தேட முயற்சி செய்கிறார்கள்.

வெளித்தோற்றத்தால் ஏற்பட்ட கவர்ச்சி குறைவதால் மட்டும் துரோகம் நடப்பதில்லை, உணர்வு ரீதியலான தேடலாலும் நிகழ்கிறது. உணர்வு ரீதியிலான தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லையென்றால், திருமண உறவில் கட்டாயம் விரிசல் ஏற்பட்டு அதை வெளியில் தேட முயற்சிக்கும் நிலைதான் ஏற்படும். எனவே முத்தத்தை அதிகரித்து வாழ்க்கை மகிழ்ச்சியாக்கிக்கொள்ளுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்