தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karupatti Pongal : ஆரோக்கியம் நிறைந்த கருப்பட்டி பொங்கல் – இரண்டு செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது!

Karupatti Pongal : ஆரோக்கியம் நிறைந்த கருப்பட்டி பொங்கல் – இரண்டு செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது!

Priyadarshini R HT Tamil
Nov 01, 2023 11:09 AM IST

Karupatti Pongal : ஆரோக்கியம் நிறைந்த கருப்பட்டி பொங்கல், இரண்டு செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது!

Karupatti Pongal : ஆரோக்கியம் நிறைந்த கருப்பட்டி பொங்கல் – இரண்டு செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது!
Karupatti Pongal : ஆரோக்கியம் நிறைந்த கருப்பட்டி பொங்கல் – இரண்டு செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது!

ட்ரெண்டிங் செய்திகள்

பாசிபருப்பு – கால் கப்

கருப்பட்டி (பனைவெல்லம்) – முக்கால் கப் (பொடித்தது)

முந்திரி-திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி – கால் ஸ்பூன்

நெய் – கால் கப்

குக்கரில் செய்யும் முறை

பாசிப்பருப்பை வாசம் வரும் வரை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் நன்றாக அலசிவிட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, குக்கரில் 3 கப் தண்ணீர் மற்றும் நெய் சேர்த்து 4 விசில் விடவேண்டும்.

வெல்லத்தை பொடித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து கால் டம்ளர் தண்ணீருடன் பாகு காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். (எப்போதும் வெல்லம் மற்றும் கருப்பட்டியை இதுபோல் செய்வது நல்லது. அப்போதுதான் அவற்றில் உள்ள தூசிகள் அகற்றப்படும்)

ஒரு கடாயை சூடாக்கி அதில், நெய்யை உருக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

குக்கரில் விசில் ரிலீஸ்ஆனவுடன், உருக்கிய வெல்லப்பாகு, நெய், ஏலக்காய்ப்பொடி ஆகிய அனைத்தையும் அதில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

கடைசியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

தேங்காய் தேவைப்பட்டால் துருவி சேர்த்துக்கொள்ளலாம்.

குக்கர் இல்லாமல் செய்ய

பாசிபருப்பை வறுத்து, கருப்பட்டியை உருக்கி, அரிசியை ஊறவைத்து, முந்திரி, திராட்சையை வறுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 6 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அரிசி மற்றும் பருப்பை அதில் சேர்க்க வேண்டும். அது நன்றாக வெந்தவுடன், அதில் வெல்லப்பாகு, நெய் சேர்த்து கெட்டியானவுடன், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து இறக்கவேண்டும்.

குறிப்பு

இந்தப்பொங்கலில் தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம். பாதியளவு தண்ணீர் பாதியளவு பால் அல்லது தேங்காய் பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தப்பொங்கலில் சர்க்கரை, கல்கண்டு என எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்