Karpuravalli Bajji : கிரிஸ்பி அண்ட் டேஸ்டியான ஈவ்னிங் ஸ்னாக்; டிஃப்ரன்ட்டான சுவையில் செய்யலாம் கற்பூரவல்லி பஜ்ஜி!
Karpuravalli Bajji : கிரிஸ்பி அண்ட் டேஸ்டியான ஈவ்னிங் ஸ்னாக்; டிஃப்ரன்ட்டான சுவையில் செய்யலாம் கற்பூரவல்லி பஜ்ஜி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் தரும்.
கற்பூரவல்லி அல்லது ஓமவல்லியில் பஜ்ஜி செய்யமுடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கற்பூரவல்லியும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த இலையை பச்சையாக சாப்பிட கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால் பஜ்ஜி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி சளி, இருமலை போக்கும் தன்மைகொண்டது. வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ஓமவல்லி இலையை சூடாக்கி அதன் சாறை குழந்தைகளில் நெஞ்சில் தடவி நெஞ்சு சளி கரைந்தோடும். இந்த இலையை தீயில் ஒரு வாட்டு வாட்டி துணியில் முடிந்து கையில் கட்டிக்கொண்டால் அது உங்கள் சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும். உடல் எடை குறைக்கும், இதை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது செரிமானம் மேம்படும். இதில் துவையல் செய்யலாம். பஜ்ஜி கூட செய்யமுடியும். அது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கற்பூரவல்லி இலைகள் – 10
(நல்ல இலைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்)
எண்ணெய் – பஜ்ஜி பொரித்து எடுக்க தேவையான அளவு
பஜ்ஜி மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்
கடலை மாவு – ஒரு கப்
மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
பெருங்காயத் தூள் – சிறிதளவு
ஓமம் – கால் ஸ்பூன்
பேக்கிங் சோடா அல்லது சமையல் சோடா – ஒரு சிட்டிகை
செய்முறை
கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து சூடாக்கிக்கொள்ளவேண்டும்.
கடலை மாவில் உப்பு, சோடா உப்பு, பெருங்காயத்தூள், ஓமம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவேண்டும்.
கற்பூரவல்லி இலைகளை நன்றாக அலசிவிட்டு காயவைத்து மாவில் முக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்.
எண்ணெயில் சேர்த்து பஜ்ஜிகளாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த பஜ்ஜியில் ஒரு கலோரி உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 0.2 கிராம், புரதம் 0.1 கிராம், கொழுப்பு 0.1 கிராம், சாச்சுரேடட் கொழுப்பு 0.01 கிராம், பாலிசாச்சுரேடட் கொழுப்பு 0.04 கிராம், மோனோசாச்சுரேடட் கொழுப்பு 0.01 கிராம், சோடியம் 8 மில்லி கிராம், பொட்டாசியச்சத்துக்கள் 10 மில்லி கிராத், நார்ச்சத்துக்கள் 0.2 கிராம், சர்க்கரை 0.04 கிராம், கால்சியம் 2 மில்லி கிராம், இரும்புச்சத்துக்கள் 0.1 மில்லி கிராம், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகிய சத்துக்கள் உள்ளன.
ஓமவல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
ஓமவல்லி இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இந்த இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் நிறைந்தது.
இது வீக்கத்துக்கு எதிராக செயல்படக்கூடியது. இதில் உள்ள ரோஸ்மாரினிக் அமிலம் அதற்கு உதவுகிறது. இது உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கிறது. ஓமவல்லி இலைகளில் நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது எலிகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி இலைகளில் பாக்டீரியா, பூஞ்ஜை மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதன் எண்ணெய்கள், நுண்ணுயிர்களின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. பல்வேறு வகை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரானதும் ஆகும்.
செரிமானத்துக்கு உதவுகிறது. சளி, இருமல் சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணம் கொடுக்கிறது. மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. எனவே அடிக்கடி கற்பூரவல்லி இலைகளை சேர்த்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்