Benefits of Thuthi Leaves : மூல நோயை மூலாதாரமின்றி அடித்து விரட்டும் துத்தி இலைகள்! எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்!
Benefits of Thuthi Leaves : மூல நோயை மூலாதாரமின்றி அடித்து விரட்டும் துத்தி இலைகள், அதில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

துத்தி இலைகள் இதய வடிவம் கொண்டவை. இதில் சிறிய மஞ்சள் நிற பூக்கள் பூக்கும். இந்த தாவரம் 2 மீட்டர் உயரம் வரை வளரும். துத்தி இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது என்று நம்பப்படுகிறது. துத்தி இலையைப்போல் பல்வேறு மூலிகைச் செடிகள் நமது உடலில் ஏற்படும் உபாதைகளைப் போக்குகிறது. தமிழ்நாட்டில் துத்தி இலைகள் சமைக்கப்பட்டும், பச்சையாகவும் உட்கொள்ளப்படுகிறது. மனித உடலுக்கு துத்தி இலையின் ஒவ்வொரு பாகமும் நன்மை கொடுக்கிறது. இதன் இலைகள், மலர்கள், தண்டுகள், பழங்கள் மற்றும் வேர் என அனைத்தும் மனிதனுக்கு உதவுகிறது. துத்தி இலைகள் மலச்சிக்கலைப்போக்கும் வீட்டுத் தீர்வு ஆகும். கடற்கரையோரங்களிலும், சாலையோரங்களிலும் அதிகம் வளர்கிறது. துத்தியில் 29 வகைகள் உள்ளன. இதில் பனியார துத்தி என்பது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் கடும் வெப்பத்தில் வளர்கிறது. தென்னிந்தியா, இலங்ளை, மலேசியா மற்றும் அமெரிக்காவில் சில இடங்களில் வளர்கிறது.
மூலநோய்க்கு தீர்வு தரும் துத்தி
துத்தி இலைகள் மூலநோயை குணப்படுத்த உதவுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் துவர்ப்பு மற்றும் கடும் சூடான, காரம் மற்றும் புளிப்பு சுவை அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் குடலில் வாயுக்களை ஏற்படுத்துகிறது. இதனால் மூலம், ரத்த மூலம் ஆகியவை ஏற்படுகிறது. அதற்கு துத்தி இலைகள் உதவுகிறது.
துத்தி இலைகளை சிறிது எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து மோரில் கலந்து, 2 – 3 நாட்கள் வெறும் வயிற்றில் பருகினால், மூலநோயால் ஏற்படும் வலி குறையும். முலநோயால் ஏற்படும் உதிரப்போக்கையும் குறைக்கும்.
