Beans Podi Poriyal : குக் வித் கோமாளி ரெசிபி! விஜய் சேதுபதியின் ஃபேவரைட்! கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல்!-beans podi poriyal cook with comali recipe vijay sethupathis favorite beans fried with peanut powder - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beans Podi Poriyal : குக் வித் கோமாளி ரெசிபி! விஜய் சேதுபதியின் ஃபேவரைட்! கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல்!

Beans Podi Poriyal : குக் வித் கோமாளி ரெசிபி! விஜய் சேதுபதியின் ஃபேவரைட்! கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல்!

Priyadarshini R HT Tamil
Jul 06, 2024 05:00 PM IST

Beans Podi Poriyal : குக் வித் கோமாளியில் விஜய் சேதுபதிக்கு பிடித்த ரெசிபி, கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல்!

Beans Podi Poriyal : குக் வித் கோமாளி ரெசிபி! விஜய் சேதுபதியின் ஃபேவரைட்! கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல்!
Beans Podi Poriyal : குக் வித் கோமாளி ரெசிபி! விஜய் சேதுபதியின் ஃபேவரைட்! கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல்!

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – கால் ஸ்புன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெரிய வெங்காயம் – 1

பீன்ஸ் – ஒன்றரை கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை பொடி செய்வது எப்படி?

வரமிளகாய் – 2

வறுத்த வேர்க்கடலை – அரை கப்

தேங்காய் துருவல் – கால் கப்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல், வரமிளகாய், வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவல் மூன்றையும் ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

அதை மிக்ஸிஜாரில் சேர்த்து கொரகொரப்பான பொடியாக்கிக்கொள்ளவேண்டும்.

பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுந்து, சீரகம் மற்றும் கடலை பருப்பு சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பொன்னிறமானவும், அதில் பீன்ஸ், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக வதங்கவிடவேண்டும்.

கடைசியான அரைத்து வைத்துள்ள வறுத்த கடலைப்பொடியை சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு இறக்கினால் சூப்பரான் பீன்ஸ் பொரியல் தயார். இதை சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாற சுவை அள்ளும்.

ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். இந்த ரெசிபி குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்டது ஆகும்.

பீன்ஸில் உள்ள சத்துக்கள்

ஒரு கப் பீன்ஸில் 31 கலோரிகள் உள்ளன. 0 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 3.4 கிராம்கள் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள் கே 18 சதவீதம், சி 18 சதவீதம், வைட்டமின் பி9 9 சதவீதம், இரும்புச்சத்து 6 சதவீதம், பொட்டாசியச்சத்து 4 சதவீதம் உள்ளது.

பீன்ஸின் நன்மைகள்

செரிமானத்துக்கு உதவுகிறது

பச்சை பீன்ஸில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. நார்ச்சத்துக்கள் மலத்தை இலகுவாக்குகிறது.

பசியை கட்டுப்படுத்துகிறது

சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, அது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதுதான் உங்களுக்கு மீண்டும் பசிக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

பச்சை பீன்ஸில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது. கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற ஊட்டச்சத்துக்களும் தேவை.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன்தான் உங்களை தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து காக்கிறது. எனவே பச்சை பீன்ஸை சாப்பிடும்போது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இதய நோய் ஏற்பட காரணமாகிறது. எனவே அதை தடுக்க அதிகம் பச்சை காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இதய நோய் ஆபத்தை தடுக்கலாம். பச்சை பீன்ஸில் உள்ள ஃபோலேட்கள் மற்றம் பெட்டாசியம், உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.