இருமலை அடித்து விரட்டி உடனடி நிவாரணம் தரும்; இந்த எளிய வீட்டு தீர்வை மட்டும் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இருமலை அடித்து விரட்டி உடனடி நிவாரணம் தரும்; இந்த எளிய வீட்டு தீர்வை மட்டும் பாருங்கள்!

இருமலை அடித்து விரட்டி உடனடி நிவாரணம் தரும்; இந்த எளிய வீட்டு தீர்வை மட்டும் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 22, 2024 04:02 PM IST

இருமலை உடனடியாக நிறுத்தும் வீட்டு நிவாரணங்கள் என்ன?

இருமலை அடித்து விரட்டி உடனடி நிவாரணம் தரும்; இந்த எளிய வீட்டு தீர்வை மட்டும் பாருங்கள்!
இருமலை அடித்து விரட்டி உடனடி நிவாரணம் தரும்; இந்த எளிய வீட்டு தீர்வை மட்டும் பாருங்கள்!

இருமல் ஏற்பட காரணங்கள்

அலர்ஜி, ஆஸ்துமா, வேதிப்பொருட்கள் மற்றும் எரிச்சல் ஏற்படுத்தும் காற்றை சுவாசிப்பது.

மூச்சுக்குழாய் வீக்கம்

தொண்டை கரகரப்பு

கேஸ்ட்ரோஈசோபாஜல் ரிப்ளக்ஸ்

மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

குறிப்பாக உயர் ரத்த அழுத்த மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

மூக்கின் உள்புறத்தில் வீக்கம்

உள் நாக்கு வளர்ச்சி

நிமோனியா

புகைத்தல்

குரல்வளையில் பிரச்னை

நாள்பட்ட இருமலால் ஏற்படும் பிரச்னைகள்

சில நேரங்களில் இருமல் கூட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோயாக மாறும் வாய்ப்பு உண்டு. எனவே நாள்பட்ட இருமல் ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

இதயம் செயலிழப்பு, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், நாள்பட்ட நுரையீரல் தொற்று, நுரையீரல் புற்றுநோய், உறக்க கோளாறுகள், காசநோய் போன்ற ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

பொதுவாக இருமல் வரும்போது செய்யவேண்டியவை

அதிகமாக தண்ணீர் பருகவேண்டும்.

இருமல் மருந்துகள் அல்லது மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும்.

தேன் பருக்வேண்டும்.

இருமலை தவிர்க்க

வேதிப்பொருட்கள், மணமூட்டிகள், அலர்ஜி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் மணங்களை, மூக்கில் நுகர்ந்து பார்க்கக்கூடாது.

கைகளை கழுவுங்கள், நல்ல சுகாதார பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். சுவாச கோளாறுகள் அடிக்கடி ஏற்படாமல் தடுத்துக்கொள்ளுங்கள்.

புகைத்தலை நிறுத்தவேண்டும். புகைப்பிடிப்பவருட்ன் இருப்பதையும் குறைக்கவேண்டும்.

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

இருமும்போது ரத்தம் வந்தால், மூச்சு விடுவதில் சிரமம், மேல் மூச்சு வாங்குவது, சோர்வு, குளிர், காய்ச்சல், நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

ஆனால் தீவிரமாக இல்லாதபோது உங்களுக்கு சில வீட்டு குறிப்புகளே உதவும் அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு திடீரென நிற்காமல் இருமல் வந்துகொண்டே இருந்தால், வீட்டில் இருந்தே செய்யக்கூடிய இந்த எளிய தீர்வை செய்துவிடலாம். அது எப்படிப்பட்ட இருமலையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

தேவையான பொருட்கள்

ஓமவல்லி இலை – 4

துளிசி இலை – 16

சின்ன வெங்காயம் – 6

கல் உப்பு – ஒரு சிட்டிகை

(இவற்றை எடுத்து உரலில் தட்டி சாறு பிழிந்து கொள்ளவேண்டும்)

மிளகுத் தூள் – கால் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

இடித்த சாற்றில் மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் மூன்று நாள் முதல் ஒரு வாரத்திற்கு பருகவேண்டும்.

இதை செய்யும்போது உங்களுக்கு சளி கரைந்து உடனடியாக வெளியேறி அது ஏற்படுத்தும் இருமலை நிறுத்த உதவும். எப்படிப்பட்ட இருமலையும் குணப்படுத்திவிடும். எனவே மழைக்காலங்களில் சளி, இருமல் ஏற்பட்டால் உடனே இதைச் செய்துவிடுங்கள். உங்களின் இருமல் உடனே கட்டுப்படுத்தப்படும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.